“தமிழக முதல்வரை பின்னுக்கு தள்ளிய யோகி ஆதித்யநாத்..” – பிரபல பத்திரிக்கை வெளியிட்ட கருத்துக்கணிப்பு.!

2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் வெளியாக தொடங்கி இருக்கிறது. இந்தியாவின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான இந்தியா டுடே , ‘மூட் ஆப் தி நேசன்’ என்ற பெயரில் அரசியல் சார்ந்த கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 338 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த முறையும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி தான் மத்தியில் அமையும் என்று அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இவை தவிர மோடிக்கு பின் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பையும் வெளியிட்டு இருந்தது.

அந்தக் கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள் மோடிக்கு பிறகு அமித்ஷா பிரதமராக வரவேண்டும் என தெரிவித்தனர் அமித் ஷாவை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் யோகி ஆதித்யநாத் மற்றும் மூன்றாவது இடத்தில் நிதின் கட்காரி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. இன்னிலையில் இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் யார் என்ற கருத்தையும் இந்தியா டுடே தனது கருத்துக்கணிப்பின் மூலம் தெரிவித்து இருக்கிறது. இதன் அடிப்படையில் இந்தியாவின் சிறந்த முதல்வர்களுக்கான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது.

இந்த கருத்துக்கணிப்புகளின் முடிவில் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் உத்திரபிரதேச மாநிலத்தில் இரண்டு முறை முதலமைச்சராக இருந்து வருபவருமான யோகி ஆதித்யநாத் இந்தியாவில் தலைசிறந்த முதல்வர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இவரை சிறந்த முதல்வராக தேர்வு செய்து 46.3 % வாக்குகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 19.6 % வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 8.8 % வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திலும் இருக்கிறார். நமது தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் 5.5% வாக்குகளுடன் நான்காம் இடம் பெற்றுள்ளார்.

Next Post

”பாஜக அரசின் தாரக மந்திரம் இதுதான்”..!! மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்..!!

Sat Feb 10 , 2024
சீர்த்திருத்தம், செயலாக்கம், மீட்டுருவாக்கம் ஆகிய மூன்றும் எங்களது தாரக மந்திரமாக இருந்து வருகிறது என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  அயோத்தி ராமர் கோயில் திறப்பை பாராட்டி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமர் கோயில் தீர்மனத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட நாட்டின் வளர்ச்சி பாதிக்கவில்லை. புதிய நாடாளுமன்றத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வளர்ச்சி […]

You May Like