மாநகராட்சி, நகராட்சியில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நகராட்சி துறையில் காலியாகவுள்ள 1,933 பணியிடங்களுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேர்வுகள் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு www.tnmaws.ucanapply.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிட விவரங்கள் :

உதவி பொறியாளர் (மாநகராட்சி) : 146

உதவி பொறியாளர் (நகராட்சி) : 80

உதவி பொறியாளர் (சிவில்/மெக்கானிக்கல்) : 145

உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) : 71

உதவி பொறியாளர் (மெக்கானிக்கல்) : 14

உதவி பொறியாளர் (சிவில்) : 58

உதவி பொறியாளர் (திட்டம்- மாநகராட்சி) : 156

உதவி பொறியாளர் (திட்டம் – நகராட்சி) : 12

இளநிலை பொறியாளர் : 24

தொழில்நுட்ப உதவியாளர் : 257

வரைவாளர் (நகராட்சி) : 130

வரைவாளர் (மாநகராட்சி) : 35

பணிமேற்பார்வையாளர் : 92

நகர ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டம்) : 367

துப்புறவு ஆய்வாளர் (மாநகராட்சி, நகராட்சி) : 244

சம்பள விவரம் :

ஆய்வாளர் பணிக்கு ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். மற்ற பணிகளுக்கு ரூ. 35,000 முதல் ரூ.1,38,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் நாளை முதல் வரும் 12ஆம் தேதி 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை விண்ணப்பங்களை திருத்தலாம். அதன் பின்னர் திருத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser6

Next Post

”சேப்பாக்கத்தில் ரஞ்சி கோப்பை போட்டியை இலவசமாக பார்க்கலாம்”..!! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

Thu Feb 8 , 2024
தமிழ்நாடு – கர்நாடகா மோதும் ரஞ்சி கோப்பை 2024 டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு, கர்நாடக அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை 2024 டெஸ்ட் போட்டி, வரும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த […]

You May Like