மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

விளைநிலங்களில் பெட்ரோலிய எண்ணெய்க்குழாய் பதிப்பதற்கு எடப்பாடி அரசு தான் காரணம் – வைகோ கண்டனம்

2 vaiko 1

கோவை , திருப்பூர் உள்ளிட்ட 7 மாவடங்களில் விளைநிலங்களில் பெட்ரோலிய குழாய் அமைப்பது விவசாயிகள் கடுமையாக பாதிக்கும் செயல் எனவும் இதற்கான அனுமதியினை வழங்கிய எடப்பாடி அரசிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.


விளைநிலங்களில் பெட்ரோலிய குழாய் அமைவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டம் இருகூர் முதல், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில், விவசாய விளைநிலங்களில் குழாய் பதித்து, பெங்களூரு தேவனகொந்தி வரை, பெட்ரோலிய எண்ணெய் கொண்டு போகும் திட்டத்தை (BPCL – IDPL) பாரத் பெட்ரோலிய நிறுவனம் அறிவித்தது.

pibeline petrolim 1

இதில் பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் சட்டம் 1962-இன்படி, எண்ணெய்க் குழாய் பதிப்பில் பழுது ஏற்பட்டாலோ அல்லது விபத்துகள் நேர்ந்தாலோ, நிலத்தின் உரிமையாளர்களே பொறுப்பு ஆக்கப்படுவர். இச்சட்டத்தில், 2012-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, நில உரிமையாளர்கள் நிலத்தையும் ஒப்படைத்து விட்டு, அதில் பதிக்கப்பட்ட குழாய்களையும் காவல் காக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழாய் பதிக்கப்பட்ட நிலங்களில் தென்னை, மா போன்ற மரப் பயிர்கள் வளர்க்கக் கூடாது எனவும், குடியிருப்புகள், மாட்டுச் சாலைகள், கோழிப் பண்ணைகள், ஆழ்குழாய் கிணறுகள் உள்ளிட்ட எவ்விதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது , மேலும் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிபந்தனைகளோடு உள்ள இந்தத் திட்டத்தை அறிவித்தபோதே, விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் இதுவரை அரசு அதனை கவனத்தில் கொள்ளாமல்
2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், விளைநிலங்களில் அளவீடு செய்யும் பணியைத் தொடங்கியது. இதற்கு எதிராக 7 மாவட்டங்களின் விவசாயிகள் அறப்போராட்டங்களில் இறங்கினர்.

thirupur 1 1

அதைப் பொருட்படுத்தாமல், பொது மக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தாமல், தான்தோன்றித்தனமாக, பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் சட்டம் 1962-இன்படி, 317 கிலோ மீட்டர் தொலைவிற்கு, 6000 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 1300 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றி, பயன்பாட்டு உரிமையை எடுத்துக் கொள்ள, பாரத் பெட்ரோலிய நிறுவனம் குறிப்பு ஆணை வெளியிட்டு இருக்கின்றது. இதற்கு, எடப்பாடி பழனிசாமி அரசுதான் காரணம் என குற்றம் சாட்டினார். மேலும் விவசாயிகளின் காவலர்’ என்று கூறிக் கொள்ளும் முதல்வர், விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எண்ணெய்க் குழாய்களை விளைநிலங்களில் பதிக்கும் திட்டத்தைக் கைவிட்டு, சாலை வழியாக எடுத்துச் செல்ல தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் சங்கங்களின் சார்பில் மார்ச் 9-ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிப்பதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser3

Next Post

ஒரு நிமிடத்தில் 4.42 லட்சம் கோடியை இழந்த இந்திய முதலீட்டாளர்கள்..

Fri Mar 6 , 2020
கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகம் தொடங்கியுள்ளது. இதனால், இந்திய பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள்  ஒரு நிமிடத்தில் 4 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.  உலகம் முழுவதும் பரவி வரும் கொரானா காரணமாக, உயிரிழப்புகளோடு வணிகமும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவிலும் 30 பேருக்கு நோய் தொற்று அறிகுறி இருப்பது  […]
sensex nifty50 snap 4 day record breaking spree infosys tcs fall

You May Like