மாடு குறுக்கே வந்ததால் வந்தே பாரத் ரயில் 4-வது முறையாக விபத்து!!

ஒரே மாதத்தில் 4-வது முறையாக வந்தே பாரத் ரயில் மாடு மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் கடந்த மாதம் 30 ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. குஜராத் – காந்தி நகர் இடையே செல்லும் ரயில் முதல் நாளே  பசுமாடுகள் மீது மோதியது. அடுத்த நாளே 2வது முறையாக எருமை மாடுகள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் முன்பக்க எஞ்சின் கடும் சேதம் ஏற்பட்டது. தற்காலிகமாக சரி செய்யப்பட்ட ரயில் பின்னர் பயணத்தை தொடர்ந்தது.

அதே நேரத்தில் அடுத்த நாள் ரயில் சக்கரங்கள் ஜாம் ஆனதால் பின்னர் பழுது நீக்கும் தளத்தில் வைத்து ரயில் சரி செய்யப்பட்டது. இந்நிலையில் குஜராத்தின் கஞ்சாரி மற்றும் ஆனந்த் நிலையத்திற்கு நடுவில் பசு மாடு மோதி ரயில் 4 வது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். காலை 8 .17 மணி அளவில் நடந்த விபத்தை அடுத்து அவசர வேலையாக பயணம் செய்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். 15 நிமிடம் ரயில்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ,சென்னை -மைசூரு இடையே விடப்படும் ரயில் பற்றி தகவல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் ’’ பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11-ம் தேதி பெங்களூரு வருகிறார். அன்றைய தினம் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது முனையத்தை அவர் திறந்து வைக்கிறார். அதே விழாவில் கெம்பே கவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். அன்றைய தினம் பிரதமர் மோடி சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இது, இந்தியாவின் 5-வது மற்றும் தென்இந்தியாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையாகும். 

Next Post

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல்.. முட்டை விலை குறையுமா? பீதியில் வியாபாரிகள்!!

Sat Oct 29 , 2022
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள் ஊஷார்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கோழிகளிடையே பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. நாமக்கல் மண்டலத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  அதன்படி கோழிப்பண்ணைகளுக்கு வரும் லாரிகள், பண்ணைகளில் இருந்து வெளியே செல்லும் லாரிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. ஊழியர்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மட்டுமே பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கோழிகளுக்கு செலுத்தும் மருந்துகள் கூடுதலாக செலுத்தப்படுகிறது.  கேரளாவுக்கு செல்லும் முட்டைகள் தடை வருமா […]

You May Like