உலகிலேயே பணக்கார கடவுள் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா? இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்…

வடமாநில தம்பதிகள் உட்பட மூவர் வெட்டி படுகொலை…தவிக்கும் 10 மாத குழந்தை…

சேலம் அருகே, வடமாநிலம் தம்பதிகள் உள்பட மூன்று பேரை ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

akash murder

சேலம் மாவட்டம் திருமலைகிரி அருகே உள்ள பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் வெள்ளி கொலுசு தயாரிக்கும் பட்டறையை சொந்தமாக நடத்தி வருகிறார். இவரிடம் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். தங்கராஜூவின் வீட்டுக்குப் பின் உள்ள தோட்டத்தில் தான் தன்னிடம் வேலை செய்து வரும் தொழிலாளர்களை தங்க வைத்திருக்கிறார். இந்நிலையில், பட்டறையில் வேலை செய்து வந்த டெல்லி மாநிலம் ஆக்ராவை சேர்ந்த ஆகாஷ், அவருடைய மனைவி வந்தனா மற்றும் அவர்களுடைய பத்து மாத கைக்குழந்தையுடன் ஆகாஷின் உறவினர் சன்னி என்பவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். வடமாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் உள்ளிட்ட மேலும் சிலர் மற்றொரு வீட்டில் வசித்து வந்தனர். மேலும், சனிக்கிழமையன்று (மார்ச் 7) ஆக்ராவில் இருந்து வினோத் உள்பட நான்கு பேர் புதிதாக தங்கராஜூவின் வெள்ளிப்பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தனர்.

இந்த நான்கு பேரும், தினேஷ் தங்கியிருந்த வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) இரவு 08.00 மணியளவில், வீட்டுக்கு வெளியே தொட்டிலில் போடப்பட்டிருந்த குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்தது. ஆகாஷ் மற்றும் அவருடைய மனைவியும் தங்கி இருந்த வீட்டின் கதவு வெளிப்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளிப்பக்கமாக தாழிடப்பட்டு இருந்த கதவை திறந்து பார்த்தபோது, வந்தனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வந்தனாவின் கணவரையும்,உறவினரான சன்னியையும் தேடினர். அப்போது, வீட்டின் பின்பக்கத்தில் 300 அடி தொலைவில் உள்ள தோட்டத்தில் ஆகாஷ், சன்னி ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடந்தனர். மேலும், ஒரே இரவில் மூன்று பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தால், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார், துணை ஆணையர் தங்கதுரை மற்றும் உதவி ஆணையர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை துரிதப்படுத்தினர். மோப்ப நாயுன் உதவியுடன், சோதனை நடத்தப்பட்டு, கைரேகை நிபுணர்களால் தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.

மேலும், மூன்று பேரின் சடலங்களும் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணையில், ஆகாஷூம் அவருடைய மனைவியும் ஞாயிற்றுக்கிழமை இரவு 07.00 மணியளவில் வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் குடிநீர் பிடிக்க சென்றதாகவும், சன்னியும் அவர்களுடன் இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த வினோத்தும் பின்தொடர்ந்து கூட்டாளிகளுடன் வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதால் ஆகாஷையும் அவருடைய உறவினர் சன்னியையும் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து, பின்னர், வந்தனாவை தூக்கிச்சென்று, அவருடைய வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவரையும் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் ஆகாஷ் மற்றும் வினோத் ஆகியோரிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்திருக்கிறதா என்ற சந்தேகத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வருபவர்களுக்கு ஹிந்தி மொழி மட்டுமே தெரியும் என்பதால், சம்பவம் நடந்த நேரத்தில் காவல்துறையினரிடம் ஹிந்தி மொழி அறிந்தவர்கள் இல்லாததால் தகவல்களை தெரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த கொலையில் ஈடுபட்ட வினோத் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பலை சேலம் வழியாக வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் சோதனை நடத்தி தேடி வருகின்றனர். குழந்தையை ஏதும் செய்யாமல் விட்டாலும், குழந்தை தாய் இல்லாமல் தவிக்கும் நிலையை காணமுடிகிறது.

1newsnationuser2

Next Post

கொரோனா வைரஸ் எதிரொலி: வெளிநாடுகளுக்கு சென்ற ஊழியர்களை வீட்டிலிலேயே பணியாற்ற உத்தரவு- ஐடி நிறுவனங்கள்

Mon Mar 9 , 2020
வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றி வந்த ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியினை மேற்கொள்ள சென்னையில் சில ஐடி நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளது சென்னையில் செயல்பட்டுவரும் பல ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மலேசியா, இத்தாலி, லண்டன்,கனடா போன்ற வெளிநாடுகளுக்கு பணி நிமிர்த்தமாக செயல்வது வழக்கம். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிருந்து காப்பாற்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில், பல ஐடி நிறுவன ஊழியர்கள் […]
2 it employess

You May Like