
வேலூர்: வீட்டில் குளித்துக்கொண்டிருந்த போது 15 வயது மாணவியை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து மிரட்டியதால்,அச்சத்தில் மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 15 வயதான மாணவி குளித்துக்கொண்டிருக்கும் போது வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது. மாணவியின் வீட்டு பாத்ரூமில் மேற்கூரை இல்லாத காரணத்தினால் அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் செல்போனில் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்துள்ளார். மேலும் தன்னுடன் நண்பர்களையும் உடன் அழைத்து வந்து வீடியோ எடுத்து மாணவியை தங்களின் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியுள்ளனர். இல்லையென்றால் குளிக்கும் வீடியோவினை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து மாணவி அவர்களின் ஆசைக்கு ஒத்துழைக்க மறுத்தப்போது, அந்த பெண்ணின் உறவினருக்கு வீடியோவை அனுப்பியதோடு பலருக்கும் அனுப்பிவைத்துள்ளனர். தயவு செய்து வீடியோவினை டெலிட் செய்துவிடும் படி கெஞ்சி கேட்டும் அவர்கள் அந்த மாணவியினை விட்டு வைக்கவில்லை.
இதனையடுத்து தவறான பாதைக்கு செல்ல மனம் இல்லாமல்,மன உளைச்சலில் இருந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத போது மண்ணெண்ணெய் ஊற்றி உடலில் தீ வைத்துக்கொண்டார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுச்சம்பவம் குறித்து பாகாயம் போலீசார் பாதிக்கபட்ட மாணவியிடம் விசாரணை நடத்திய போது, நடந்தவற்றை எல்லாம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர்களுக்கு கடுமையான தண்டனை தரப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துவருகிறது.