பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..! விமான நிலையத்தில் பிஞ்சு குழந்தையின் சடலம்..! நிர்வாணமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெண் பயணிகள்..!

“எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்..

பாடும் நிலா என்று அழைக்கப்படும் எஸ்.பி. பாலசுப்ரமணியன் இன்று நம்முடன் இல்லை., கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை கடந்த 1 மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார்.

எஸ்.பி.பி

ஆந்திர மாநிலம் நல்லூர் மாவட்டத்தில் 1946-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4-ஆம் தேதி பிறந்தார். இவரது முழு பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம். எஸ்.பி.பி தனது 20-வது வயதிலேயே பாடத் தொடங்கினார்.

பாடகர் மட்டுமின்றி இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர் என பன்முக கலைஞராக இருந்தார். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, பத்மபூஷண் விருது, 6 முறை தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.

இளையராஜா, எஸ்.பி.பி இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதால், ஒருவரை ஒருவர் ‘வாடா, போடா’ என்று செல்லமாக பேசிக்கொள்வார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படுகா, மராட்டி என 16 மொழிகளில் 45,000 பாடல்கள் பாடியுள்ளார். இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் அவர் இடம்பிடித்துள்ளார்.

கேளடி கண்மணி படத்தில் ‘மண்ணில் இந்த காதலன்றி’ என்ற பாடலையும், அமர்க்களம் படத்தில் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடலையும் மூச்சு விடாமல் பாடி அசத்தியவர். கிரிக்கெட் விளையாட்டை மிகவும் விரும்பி பார்க்கும் எஸ்.பி.பியின் ஆர்வத்தை கேள்விப்பட்ட சச்சின், தனது ஆட்டோகிராஃப் போட்ட பேட் ஒன்றை பரிசாக அளித்தார்.

தமிழில் ரஜினிகாந்த், ராதா நடித்த துடிக்கும் கரங்கள் படம் முதற்கொண்டு பல்வேறு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில், முதலில் சிவாஜி கணேசனுக்கு பதிலாக நடித்திருக்க வேண்டியவர் எஸ்.பி.பி. தான். இதற்காக பாரதிராஜா எவ்வளவு வற்புறுத்தியும் எஸ்.பி.பி அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

எஸ்.பி.பி

அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடலை எஸ்.பி.பி பாட முக்கிய காரணம், எம்.ஜி.ஆர். அந்த பாடலுக்கு பின்னால், ஒரு சுவாரசஸ்ய கதை இருக்கிறது. அந்த பாடலை பாட வேண்டிய தினத்தில், எஸ்.பி.பிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனை தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர்., உடனே ரெக்கார்டிங்கை ரத்து செய்தார். ஆனால் இந்த தகவல் எஸ்.பி.க்கு தெரியாது.. தனக்கு பதிலாக வேறொருவர் பாடியிருப்பார் என்று நினைத்திருந்தார்.

2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கார் தன்னை அழைக்க வந்தபோது கண் கலங்கிய எஸ்.பி.பி., தன்னை போல் பிரபலமாகாத ஒரு பாடகனுக்காக எம்.ஜி.ஆர் 2 மாதங்கள் வரை காத்திருப்பாரா என்று திகைத்து போனார். பின்னர் அந்த பாடல் ரெக்கார்டிங் முடிந்த பிறகு தன்னை சந்தித்து நன்றி சொன்ன எஸ்.பி.பியை தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘தம்பி… என் படத்துல ஒரு பாட்டு பாடப் போறீங்கன்னு எல்லார்கிட்டேயும் பெருமையா சொல்லியிருப்பீங்க. உங்களுக்கு பதிலா வேற ஒருத்தரை பாட வெச்சா, அது உங்களுக்கும், உங்க நண்பர்களுக்கும் மிகப் பெரிய ஏமாற்றமா இருக்கும். அதனால் தான் உங்களுக்காக இந்த பாட்டு காத்திருந்தது’ என்று கூறினாராம்..

download 30

70ஸ் கிட்ஸ், 80-ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ் என எஸ்.பி.பி பாடல்களை கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எம்.எஸ் விஸ்வநாதன் முதல் அனிருத் வரை அவர் பணியாற்றாத இசையமைப்பாளர்களும் இல்லை.. கர்நாடக இசை முறையாக கற்றுக் கொள்ளமால், சங்கராபரணத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களை கேள்வி ஞானத்தால் பாடியது மட்டுமின்றி, தேசிய விருதையும் வென்றவர் எஸ்.பி.பி.. ஹீரோ இண்ட்ரோ பாடல்கள், காதல் தோல்வி பாடல்கள், அம்மா செண்டிமெண்ட் பாடல்கள், சோகப் பாடல்கள்.. என எந்தப் பாடலாக இருந்தாலும் அதிலும் எஸ்.பி.பி பாடல்களை பிரிப்பது கடினம்..

இவர் பாடிய 45,000 பாடல்களில் எதை சொல்வது, எதை விடுவது.. அனு தினமும் நாம் முனுமுனுத்து கொண்டிருக்கும் பாடல்களில் எப்படியாவது எஸ்.பி.பியின் பாடலும் இடம்பெற்றுவிடும்.. இப்படி நமக்கு தெரியாமலே எஸ்.பி.பியின் பாடல்களோடு தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. இனியும் அவரின் தேனிசை கலந்த குரலுடன் நாம் கேட்டுக் கொண்டிருப்போம்.. ‘இந்த தேகம் மறைந்தாலும், இசையாய் மலர்வேன்… என்ற எஸ்.பி.பியின் பாடலே அதற்கு சாட்சி..

1newsnationuser1

Next Post

சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்..!

Fri Sep 25 , 2020
புளோரிடாவில் ஒரு ஸ்நோர்கெலிங் பயணத்தின் போது சுறாவால் தாக்கப்பட்ட தன் கணவரை காப்பாற்ற அவரது கர்ப்பிணி மனைவி சற்றும் யோசிக்காமல் படகில் இருந்து குதித்தார். செப்டம்பர் 20 ஆம் தேதி மார்கோட் டியூக்ஸ்-எடி தனது பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது கணவர் ஆண்ட்ரூ எடி ஆகியோருடன் படகில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் வெளிவந்தது. திடீரென்று, ஆண்ட்ரூ படகில் இருந்து சறுக்கியபின் தண்ணீரில் விழுந்தார், ஒரு பெரிய சுறா […]
35b9c7f3416cd4cc016608a6486d68e2422d1ae7afd1c75c0629a112c4e3f28d

You May Like