இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…!

“ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..?

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக விஜய்யின் அரசியல் வருகை குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்களின் மறைவுக்கு பிறகு, விஜய்யின் அரசியல் பேச்சுகளும் அந்த தகவல்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தன.

விஜய்

இந்நிலையில் நடிகர் விஜய் – சங்கீதாவின் திருமண நாளை முன்னிட்டு மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் புரட்சி தலைவரே, புரட்சி தலைவியே’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் விஜய்யை எம்.ஜி.ஆர் போலவும், அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும் சித்தரத்து போஸ்டர் ஒட்டினர்.

vijay poster

இதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர் – விஜய் ஆகியோரை இணைத்து வைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. எம்.ஜி.ஆரின் மறு உருவமே, தமிழகம் தலைமையேற்க, 2021-ல் உங்கள் வரவை காணும் தமிழகம்’ போன்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இதே போல் ‘மக்கள் நலன் காக்க, மாணவர்களின் குறைகளை தீர்க்க, தமிழ்நாடு வேலை தமிழ்நாடு மக்களுக்கே கிடைத்திட நாடே எதிர்பார்க்கும் நாளைய முதல்வரே, உங்கள் ஆட்சிக்காக காத்திருக்கிறோம்’ என்ற வாசகங்களுடன் எம்.ஜி.ஆர் – விஜய் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அதுமட்டுமின்றி மக்கள் திலகத்தின் மறு உருவமே, விரைவில் நல்லாட்சி தருக.. ஆளப்போறான் தமிழன் தளபதி 2021-ல்..?” என்று வாசகங்களுடன் இடம்பெற்றுள்ளன. இப்படி எம்.ஜி.ஆர் – விஜய் போஸ்டர் ஒட்டப்படுவது நாளுக்கு நாள் அதிகமானது.

vijay poster thumbnail

இதனிடையே சில அமைச்சர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்தனர். அந்த வகையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “எம்ஜிஆர், ஜெயலலிதா 2 பேர் இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது, அவர்களைப்போல் இனி ஒருவர் வரவும் முடியாது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல் மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மனாகிவிட முடியாது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எம்ஜிஆர் தான்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு இதுகுறித்து பேசிய போது, எம்.ஜி.ஆரை போல சித்தரித்து படம் போடுவதால், எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது.. எம்.ஜி. ஆரை போல மாதிரிகளை உருவாக்கலாமே தவிர, இன்னொரு எம்.ஜி.ஆரை உருவாக்க முடியாது என்று தெரிவித்தார்.

ஆனால் அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜனோ, எம்ஜிஆர் தோற்றத்தில் நடிகர் விஜய்க்கு போஸ்டர் ஒட்டியது ரசிகர்களின் விருப்பம் என்றும். எம்ஜிஆர் ஜெயலலிதா போலவே அவர் இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் நினைப்பதில் எந்த தவறுமில்லை எனவும், அது வரவேற்கத்தக்க விஷயம் தான் என்று தெரிவித்தார்.

vijay poster thumbnail 1

இது அதிமுகவினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்திய நிலையில், ஒரு சில இடங்களில் போஸ்டர்களை கிழித்து எறியப்பட்ட நிலையில், சில இடங்களில் விஜய் ரசிகர்கள் மீது வழக்குகள் போடப்பட்டும் வருகிறது.

இந்த சூழலில் சென்னையில் மீண்டும் விஜய்யின் அரசியல் வருகை குறித்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர். – கருணாநிதிக்கு இடையே விஜய் இருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் “ ஏங்குகிறது சட்டமன்றம்.. 2021-ல் வா என்கிறது மக்கள் மன்றம்.. விரைவில் முடிவெடு,, மக்களுக்கு ஒளிக்கொடு.. கொள்கை விளக்கே” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

vijay poster n

ஆனால் உண்மையில் நடிகர் விஜய் இப்போது தான் எம்.ஜி.ஆரை முன்னிலைப் படுத்துகிறாரா என்று கேட்டால்.. இல்லை என்பதே பதில்.. விஜய் தமிழ் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் தன்னை ஒரு ரஜினி ரசிகனாகவே முன்னிலைப் படுத்தினார். அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீது அதிக மரியாதை கொண்டதால் திமுகவுடன் விஜய் நெருக்கமாக இருந்தார் என்று கூட சொல்லலாம். இந்த சூழலில் விஜய் முதல்முறையாக வசீகரா திரைப்படத்தில் எம்ஜிஆர் போல நடித்தும், நடனமாடியும் இருந்தார்.

இதனிடையே 2009 காலக்கட்டத்தில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விஜய் சந்தித்து பேசினார். மேலும் ஸ்டாலினை தளபதி என்று திமுகவினர் அழைத்த நிலையில், விஜய்யையும் அவரது ரசிகர்கள் தளபதி என்று அழைத்தனர். இதனை திமுக தலைமை ரசிக்கவில்லை.. எனவே திமுக ஆட்சியின் போது விஜய்யின் காவலன் பட வெளியீட்டின் போது திமுக தரப்பில் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் அந்தப் படம் ஒரு வழியாக ரிலீஸ் ஆனது.

kavalan vijay stills images wallpapers 02

இதனைத் தொடர்ந்து திமுக ஆதரவு மனநிலையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத் தொடங்கினார் விஜய். 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி, அதிமுக ஆட்சி அமைக்க அணிலாக உதவியதாகவும் கூறியிருந்தார். ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் தலைவா படத்தால் விஜய்க்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. தலைவா படத்தின் டைட்டிலுக்கு கீழ் ‘டைம் டு லீட்’ என்ற வாசகம் தான் அதிமுகவை கோபமடைய செய்தது. பின்னர் அந்த வாசகம் நீக்கப்பட்டதுடன், தமிழக அரசின் ஆதரவு வேண்டி விஜய் வீடியோ வெளியிட்ட பின்னரே தலைவா திரைப்படம் வெளியானது.

download 24 1

இந்த தொடர் பிரச்சனைகளுக்கு பிறகு, நேரடியாக அரசியல் கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வந்த விஜய் திரைப்படங்களில் தன்னை ஒரு எம்ஜிஆர் அபிமானியாக காட்ட தொடங்கினார். மெர்சல், பிகில் போன்ற படங்களில் எம்.ஜி.ஆரை. நினைவுப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிந்தது. இந்த சூழலில்தான் விஜய் ரசிகர்களும் விஜய்யை எம்ஜிஆரோடு ஒப்பிட்டு அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்து வருகின்றனர். எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கியை விஜய் குறிவைப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

71555718

இதற்கு முன்பு நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய போது கூட, அவரை ‘கறுப்பு எம்.ஜி.ஆர்.’ என அவரது தொண்டர்கள் அழைத்தனர். இதே பார்முலாவை தற்போது விஜய் ரசிகர்களும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். இதுஒருபுறமிருக்க, விஜய் அரசியல் கட்சி தொடங்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெறுவாக தகவல் அண்மையில் வெளியானது.

புதிய கட்சியை பதிவு செய்வது குறித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் டெல்லி சென்று மூத்த வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற அவரது ரசிகர்கள் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டிவருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

1newsnationuser1

Next Post

அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..!

Wed Sep 23 , 2020
கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த காமகொடூரன் காசி (26) பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளான். இதனால், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் உட்பட பல பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காமுகன் காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், காசிக்கு உடந்தையாக இருந்த டிசைன் ஜீனோ (19) […]
அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..!

You May Like