விஜய்யின் அரசியல் ஆட்டம்..!! சட்டமன்ற தேர்தல்..!! அமைச்சர் உதயநிதி என்ன சொல்லியிருக்காரு தெரியுமா..?

புதிதாக அரசியல் கட்சி துவங்கியிருக்கும் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார். அதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை, தேர்தலில் போட்டியில்லை எனவும் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்தவுடன் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், புதிய அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்க உரிமை உண்டு. நடிகர் விஜய் அவர்கள் அந்த முடிவை எடுத்து இருக்கிறார். அவருக்கு நம் அனைவரின் சார்பாக பாராட்டுக்கள், அவருடைய மக்கள் பணி சிறக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

1newsnationuser6

Next Post

"இஸ்லாம் கோவில்களை இடிக்க அனுமதிக்காது.."! ஞானவாபி மஸ்ஜித் வழக்கு: அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 'AIMPLB' கருத்து.!

Fri Feb 2 , 2024
உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு செய்வதற்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது தொடர்பாக முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்த நிலையில் அலகாபாத் நீதிமன்றம் நிராகரித்ததால் உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்திருக்கிறது. மேலும் ஞான வாபி மசூதி தொடர்பாக ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் நியாயம் கோரப் போவதாகவும் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. […]

You May Like