விதிமீறல் .. மெட்டா நிறுவனத்திற்கு 24.7 மில்லியன் டாலர் அபராதம்…

வாஷிங்டன்னில் பிரசார நடைமுறை சட்டத்தின்படி விதிகளை மீறியுள்ளதாக மெட்டா நிறுவனத்திற்கு 24.7 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்னில் ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு பிரசார நிதி வெளிப்படுத்துதல் சட்டத்தை மீண்டும் மீண்டும் மீறியதாக வாஷிங்டன்னின் கிங்கவுண்டி உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அபராதம் என தெரிவிகக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 25 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 205 கோடியே 96லட்சத்து 62 ஆயிரத்து 500  கோடி ஆகும்.

பிரசார நடைமுறை சட்டத்தின்படி 800க்கும் மேற்பட்ட விதிமீறல்களை மெட்டா நிறுவனம் மேற்கொண்டதாக நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார். 1972ல் வாக்காளர்களால் நிறைவேற்றப்பட்டது இந்த சட்டம். பின்னர் அமெரிக்க சட்டமன்றம் இதை சட்டமாக்கியது.

2018ல் வாஷிங்டன் அட்டர்னி ஜெனரல் பாப் சட்டத்தை மீறியதாக ஃபேஸ்புக் மீது அவரது அலுவலகம் முன்பு வழக்குத் தொடர்ந்ததைக் சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது. கலிபோர்னியாவின் மென்லோ பூங்காவில் இயங்கி வரும் மெட்டாவிடம் பலமுறை மின்னஞ்சல் அனுப்பப்பட்டு கருத்து கேட்கப்பட்டது. வாஷிங்டன் வெளிப்படைத்தன்மை சட்டத்தின்படி விளம்பர விற்பனையாளர்கள் அரசியல் விளம்பரங்களை வாங்குபவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் , அத்தகைய விளம்பரங்களின் இலக்கு எவ்வாறு செலுத்தப்பட்டன விளம்பரத்தின் மொத்த பார்வைகள் எண்ணிக்கை , உள்ளிட்டவற்றை மெட்டா வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

அரசியல் விளம்பரங்களில் பேஸ்புக் காப்பகத்தை வைததிரக்கும். அதே நேரத்தில் வாஷிங்டன்னின் சட்டத்தின் கீழ் தகவல்களை காப்பகம் வெளியிடாது. இந்நிலையில் பெர்குசன் நிறுவனம் ஒரு செய்தி வெளியீட்டில் கூறுகையில் ’பேஸ்புக் தொடர்ந்து இது போன்ற தவறுகளை செய்து வருகின்றது. இதற்கு ஒருவார்த்தை உள்ளது. அதுதான்ஆணவம் ’’ என குறிப்பிட்டுள்து. வேண்டுமென வெளிப்படைத்தன்மை சட்டங்களை புறக்கணித்தது. மாநிலத்தில் அரசியல் விளம்பரங்களை விற்பனை செய்வதை நிறுத்துவதாக தெரிவித்த நிலையில் தொடர்ந்து அரசியல் விளம்பரங்களை விற்பனை செய்துள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் ஒவ்வொரு விதிமீறலுக்கும் 10000 டாலர்கள் வரை தண்டனை விதிக்கப்படும். ஆனால் வேண்டுமென செய்யும் ஒவ்வொரு முறைக்கும் 3 மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படும். மொத்தம் 822 விதிமீறல்களை மெட்டா செய்துள்ளது. எனவே தலா 30000 டாலர்கள் என 24.7 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Post

இரங்கல்..!! பழம்பெறும் இயக்குநர் இஸ்மாயில் ஷெராஃப் திடீர் மரணம்..!! திரையுலகினர் அதிர்ச்சி..!!

Thu Oct 27 , 2022
பிரபல பாலிவுட் இயக்குநர் இஸ்மாயில் ஷெராஃப் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 65. பாலிவுட்டில் அஹிஸ்தா அஹிஸ்தா, புலந்தி, தோடி சி பேவபாய், சூர்யா போன்ற பல படங்களை இயக்கியவர் பழம்பெரும் திரைப்பட இயக்குநர் இஸ்மாயில் ஷெராஃப். இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்தார். மறைந்த இயக்குநருக்கு நடிகர்கள் கோவிந்தா, பத்மினி […]
இரங்கல்..!! பழம்பெறும் இயக்குநர் இஸ்மாயில் ஷ்ராஃப் திடீர் மரணம்..!! திரையுலகினர் அதிர்ச்சி..!!

You May Like