இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

வறட்சியான மாவட்டத்துலயும் பசுமையை கொண்டுவரனும் அதான் எங்க இலக்கு என்ற உறுதியில் இளைஞர்கள்

“வெயிலுக்கு பஞ்சம் இல்லாத விருதுநகர் மாவட்டத்தில் கொஞ்சம் பசுமையை கொண்டுவர முயற்சிசெய்யும் கிராமத்து இளைஞர்கள்”..

krishnapuram 3 1

“எவ்வளவு தான் வெளிநாட்டுக்கே போய் வேலை பார்த்தலும் சொந்த ஊரை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க”. அப்படி தான் நாங்களும். எப்படியாவது திருச்சுழி தாலுகாவில் உள்ள எங்கள் கிருஷ்ணாபுரம் கிராமத்தையும் வளர்ச்சிப்பாதைக்கு எடுத்து செல்ல முயற்சி செய்திட்டு இருக்கோம்.. என்றனர் அக்கிராமத்து இளைஞர்கள்.அப்படி என்ன தான் அவங்க செஞ்சிட்டு இருக்காங்கன்னு பார்ப்போம்…

krishnapurammm vnr 1 1 1

விருதுநகரிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது கிருஷ்ணாபுரம் கிராமம். செல்லும் வழியில் இரு புறங்களிலும் சீமைக்கருவேலை மரங்கள் மட்டும் தான் இருந்துச்சு. மில் வேலைக்கு போவது, சீமைக்கருவேலை மரங்களை வெட்டி கரி மூட்டம் போடுவது, ஆடு மேய்ப்பது மட்டும் தான் பிரதான தொழிலாக இப்பவும் இங்கு இருந்துட்டு இருக்கு..

கிருஷ்ணாபுரம் கிராமத்துல இருக்கிற ஆலமரத்துக்கு அடியில் தான் இளைஞர்கள் கூடும் இடம், பெண்கள் தண்ணீர் எடுக்க வருவது , கண்மாயில் துணிகளை துவைப்பது போன்ற செயல்களும் அங்கு நடந்துட்டு இருந்தது. அந்த நிலையில் அங்கிருந்த இளைஞர் ஒருவர் கிட்ட , கிராமத்த பற்றி பேச ஆரம்பிச்சோம். அது ஒன்னும் இல்லேங்க எங்க ஊர்ல இளைஞர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு படிச்சு பட்டம் வாங்கி ஒரளவு வேலைக்கு போய்ட்டோம். நாங்கு பார்த்து வளர்ந்த எங்க கிராமத்ததுல கொஞ்சம் இயற்கையை கொண்டுவர முடிவு செஞ்சோம்..

krishnapuram 2

அதற்காக இளைஞர்கள் எல்லாம் ஓன்றாக சேர்ந்து கண்மாய் தூர்வாரும் பணிகளை ஊராட்சியோடு இணைந்து செய்தோம். நிலத்தடி நீரினை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கரைகளில் வேப்பமரம், ஆலமரம், புளியமரம், புங்கை போன்ற மரங்களை நட்டு பராமிச்சுட்டு வந்திட்டு இருக்கோம் என்றனர். மேலும் கிராமம் முழுவதும் பல மரக்கன்றுகளை வைத்து வேலி அமைத்து பாதுகாத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

krishnapuram 4 1

எங்கள் கிராமத்துல இருந்து படிச்சு பட்டம் வாங்கின இளைஞர்கள் பலர் சென்னை, கோவை போன்ற வெளி மாவட்டங்களில வேலைப்பார்த்துட்டு இருக்காங்க. அவர்களை எல்லாம் ஒன்றாக சேர்த்துட்டு ஒரு குழு ஆரம்பிச்சோம். மேலும் மாதந்தோறும் சந்தா காசு வசூலிச்சு அதன் மூலம் பல பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்கின்றனர்.

krishnampuram 6 1

சாலைகளின் இருபுறங்களிலும் மரங்கள் வைத்து இயற்கையை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையிலும், வரும் இளம் தலைமுறையினருக்கும் உதவி வருகின்றனர். கிராமத்தில் உள்ள நூலகத்துல தினமும் செய்தித்தாள்கள் வாங்கிட்டு இருக்கோம். மேலும் பல புத்தகங்களையும் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு உபயோகப்படுத்தும் வகையிலும் பல பணிகளை செய்திட்டு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

1 krish 1

நம் தலைமுறையினர் தான் வாழ்க்கை சூழலுக்கு ஏற்றவாறு இயற்கையை அழித்துவிட்டோம். தற்போது நாங்கள் இயற்கையின் முக்கியத்துவத்தையும், அதன் பயன்களையும் மக்களிடையேயும்,வரும் தலைமுறையினருக்கும் எடுத்துச்செல்கிறோம் என பெருமையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் வானம் பார்த்த எங்க பூமியில் கொஞ்சம் இயற்கை இருக்க வேண்டும் என சின்ன சின்ன பணிகளை மகிழ்ச்சியோடு செய்து வருகின்றனர் இக்கிராமத்து இளைஞர்கள்.

1newsnationuser3

Next Post

பிரதமர் மோடி தனது சம்பளத்தை என்ன செய்கிறார் தெரியுமா..? அதிகம் வெளிவராத தகவல்..

Mon Mar 9 , 2020
பிரதமர் மோடி தனது சம்பளத்தை என்ன செய்கிறார் என்பது குறித்து அதிகம் வெளிவராத தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்திய பிரதமராக உள்ள நரேந்திர மோடி மாதம் ரூ. 1.65 லட்சம் சம்பளமாக பெறுகிறார். இதைத் தவிர அவருக்கு மற்ற சலுகைகளும் அவருக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், மத்திய அமைச்சரவை செயலாளரின் சம்பளத்தை மோடியின் சம்பளம் குறைவு என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம் உண்மை தான். மத்திய அமைச்சரவை […]
pm modi

You May Like