வெளுத்துவாங்கும் கனமழை…தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்டா? ப்ராவோ விளையாடமாட்டார்?… பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்! முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததால், சிட்டாக பறந்த தினகரன்..! சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி… எதுக்குனு தெரியுமா? கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..! உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..!

கும்பல் கூடிய குட்டி ரவுடிகள்..அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

முழு ஊரடங்கு சமயத்தில் சென்னையில் 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கும்பலாக சேர்ந்து அரிவாளால் கேக் வெட்டி, வான வேடிக்கையுடன் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

n193139036784204ce0dff42ac86f8129e682bef9cadf8107ece331ecbd450289105671188

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், கடந்த 19ம் தேதி நள்ளிரவு பெரும்பாக்கம் பகுதியில் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்தார். இதில், பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் பகுதியில் பல்வேறு கொலை மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய இளம் ரவுடிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்களுக்கு பிரியாணி மற்றும் மது விருந்து அளித்த ஓட்டேரி வாலிபர், ரவுடிகள் புடைசூழ 2 அடி அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அப்போது, இளம் ரவுடிகள் சார்பில் அந்த வாலிபருக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவித்தும், தலையில் மலர் கிரீடம் மற்றும் சால்வைகள் அணிவித்தும் ‘எங்கள் குலசாமியே நீங்கள் தான்’ என்று ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி உள்ளனர்.

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் புடைசூழ பிறந்த நாள் விழா நடந்துள்ளது. மேலும், பிறந்தநாளில் திருவிழாவின் போது பயன்படுத்தும் பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கை நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த பிறந்தநாள் விழாவில், ஓட்டேரியை சேர்ந்த ரவுடி கார்த்திக், எஸ்.ஆர்.ராஜசேகர் மற்றும் அவர்களது கூட்டாளிகள் கலந்து கொண்டுள்ளனர். போலீசாரால் தேடப்படும் ரவுடிகள் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியது பெரும்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, வண்டலூர் அருகே உள்ள லாரி ஷெட்டில் கடந்த 2018ம் ஆண்டு பிரபல ரவுடி பினு, 120 ரவுடிகள் புடைசூழ ஆட்டம் பாட்டம், வாண வேடிக்கையுடன் தனது பிறந்தநாளை அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடினார். போலீசார் சுற்றி வளைத்தபோது தப்பிய ரவுடி பினு, பின்னர் அம்பத்தூர் துணை கமிஷனர் முன்னிலையில் சரணடைந்தார். அதை தொடர்ந்து சென்னையில் உள்ள இளம் ரவுடிகள் பலர் தங்களது பிறந்தநாளை பட்டாக்கத்தி மற்றும் அரிவாளுடன் கேக் வெட்டி கொண்டாடும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

சீன மொபைல் செயலிகளுக்கு பதில் எதை தேர்வு செய்வது????

Tue Jun 23 , 2020
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை தகராறு தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்கின்றன. சீன ஸ்மார்ட்போன்கள் முதல் மொபைல் செயலிகள் வரை புறக்கணிக்கப்படுகின்றன. மேலும், ‘சீன தயாரிப்பு புறக்கணிப்பு’ பிரச்சாரங்கள் சமூக ஊடக தளங்களில் நடத்தப்படுகின்றன. டிக்-டோக் மற்றும் ஹலோ போன்ற சீன பயன்பாடுகளைத் தடுக்க சமீபத்தில் இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்தன. இதுபோன்ற சூழ்நிலையில், சீனாவைப் புறக்கணிக்க உங்கள் மொபைலில் இருந்து சீன பயன்பாட்டு செயலிகளை […]
app Chinese

You May Like