எச்சரிக்கை : ஆதார் – பான் பயனர்கள் இதை செய்யாதீர்கள்…

இந்தியாவில் பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு இரண்டுமே முக்கியமாக கருதப்படும் நிலையில் இந்த ஆவணங்களை வைத்துபல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றது எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

பான்கார்டு என்பது நிரந்தர வங்கிக்கணக்கு போன்றது. இது இந்திய வருமான வரித்துறை வழங்கும் இந்த கார்டு பணபரிவர்த்தனைகளில் முக்கிய பங்காற்றுகின்றது. இதர செயல்பாடுகளுக்கு பான்கார்டு பயன்படுகின்றது. மேலும் வங்கிகளில் ரூ.50,000 க்கு மேல் வங்கிகளில் பணம் செலுத்தவோ, எடுக்கவோ பான்கார்டுகட்டாயமாகின்றது. இதே போலத்தான் ஆதார்கார்டும் தவிர்க்க முடியாத ஒன்று.
இன்றைய காலக்கட்டத்தில் ஆதார் இல்லாமல் தனிப்பட்ட வேலை முதல் அரசு சார்ந்த, வேலைகள் வரை எதை செய்ய முடியாது என்ற நிலை வந்து விட்டது. இத்தகைய பயன்பாடுடைய ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை நாம் எப்போது அப்டேடாகவும் அதே நேரம் பாத்திரமாகவும் வைத்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மோசடி நபர்கள் கைகளில் சிக்கி விடும். அந்த நபர்கள் உங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் கையாடுதல் மற்றும் உங்களது கார்டை வைத்து கடன் வாங்குதல் போன்ற செயல்பாடுகளால் ஈடுபடுகின்றனர்.
அதனால் உங்களது பான் மற்றும் ஆதார் அட்டை விவரங்களை தெரியாத நபர்களிடம் கொடுக்க கூடாது. மேலும் ஆதார், பான் எண் மற்றும் அதன் பிற விவரங்களை யாரிடமும் பகிர கூடாது. உங்கள் சிபில் மதிப்பெண் குறித்து சந்தேகம் இருந்தால் வங்கி கிளையை அணுகி விசாரிக்கவும். தவறு இருந்தால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும். நீங்கள் ஜெராக்ஸ் எடுக்கும் போது அசல் ஆவணத்தை மறக்காமல் கையொடு எடுத்து வர வேண்டும் இல்லையெனில் மோசடி செய்யும் நபர்கள் கைகளில் சிக்க வாய்ப்புள்ளது.

Next Post

ஐ.டி.ஊழியர்களே இதை நீங்க செஞ்சா உங்களுக்கு ஆப்புதான்!!

Wed Oct 26 , 2022
இந்தியாவில் ஐ.டி.யில் பணி புரியும் ஊழியர்கள் தற்போது மூன்லைடிங் மேற்கொள்வது அவர்களின் வேலைக்கு ஆப்பாக அமைந்துவிடும் என்ற எச்சரிக்கை பதிவுதான் இது.. ஐ.டி.நிறுவனங்கள் ஊழியர்கள் மூன் லைடிங் எனப்படும் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பது நிறுவனத்தின் விதிமுறைகள் படி அது குற்றமாகும். கொரோனாவால் ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதை […]

You May Like