‘சூரிய கிரகணத்தை உங்கள் செல்போனிலேயே பார்க்கலாம்’..!! சிறப்பு ஏற்பாடு..!! எப்படி தெரியுமா..?

உலகம் முழுவதும் இன்று தென்படும் சூரிய கிரகணத்தை காண தமிழ்நாட்டில் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. ரஷ்யா, கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை காணலாம். இந்தியாவில் மாலை 4.30 மணியளவில் சூரிய கிரகணம் தொடங்குகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களின் நடை அடைக்கப்படுகிறது. இந்நிலையில், சூரிய கிரகணத்தை காண்பதற்கு, கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வு மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தை உங்கள் செல்போனிலேயே பார்க்கலாம்..!! சிறப்பு ஏற்பாடு..!! எப்படி தெரியுமா..?

மேலும், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பொதுமக்கள் நேரடியாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் எபினேசர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், சூரிய கிரகணத்தால் எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சூரிய கிரகணம் கொடைக்கானலில் இரண்டு முதல் மூன்று சதவீதம் தென்படும் என்றும் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் எபினேசர் விளக்கமளித்துள்ளார்.

Chella

Next Post

4 ஆயிரம் ஊழியர்களின் வேலையை பறித்த பிலிப்ஸ் நிறுவனம்..!! திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?

Tue Oct 25 , 2022
விற்பனை குறைவு, வருவாய் இழப்பு போன்ற சிக்கலில் தவித்து வரும் பிலிப்ஸ் நிறுவனம், தனது 4,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் உலகின் முன்னணி நிறுவனம் பிலிப்ஸ் (Philips). இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாவே கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்நிறுவனம் தயாரித்த மருத்துவ கருவிகளில் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டு சந்தையில் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக […]
4 ஆயிரம் ஊழியர்களின் வேலையை பறித்த பிலிப்ஸ் நிறுவனம்..!! திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?

You May Like