நாங்க இத பார்த்து தான் செஞ்சோம்; சிறுவர்கள் அளித்த பகீர் தகவல்…!

உத்திரபிரதேச மாநிலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான க்ரைம் நிகழ்ச்சியை பார்த்து சிறுவனை கடத்தி கொன்றதாக ஐந்து சிறுவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் கானாமல் போன ஏழு வயது சிறுவன் அலிகார் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். ஆறு தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், 100 சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தபோது அதே பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் ஐந்து மாணவர்கள் சிக்கியுள்ளனர்.

அந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில் 40,000 ரூபாய் பணத்திற்க்காக சிறுவனை கடத்தியதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். ஒருவேளை தங்களது திட்டம் தோல்வியடைந்தால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கைக்குட்டையால் சிறுவனின் கழுத்தை நெரித்து ஆற்றில் தூக்கி போட்டதாக கூறியுள்ளனர். மேலும் டிவியில் ஒளிபரப்பாகும் க்ரைம் நிகழ்ச்சியை பார்த்து சிறுவனை கடத்தி கொன்றதாக அந்த ஐந்து சிறுவர்கள் அளித்த வாக்குமூலம் உத்திரபிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

கள்ளக்குறிச்சி விவகாரம்..! தனியார் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றம்..? அமைச்சர் முக்கிய தகவல்..!

Mon Jul 18 , 2022
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேவைப்பட்டால் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அதில், தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் ஏற்கனவே மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்து அதன் அறிக்கையை முறைப்படி […]
’Resign Anbil Mahesh’ ஹேஷ்டேக் எதிரொலி..? கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமனம் நிறுத்திவைப்பு..! - அமைச்சர்

You May Like