நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவிடம் இறங்கி வந்த நேபாளம்: எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்

இந்தியாவுடனான எல்லைப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகான தயாராகவுள்ளதாக நேபாள அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.

Oli Modi

இந்தியா – சீனா இடையே வரையறுக்கப்படாத எல்லை பிரச்னை கடந்த 1962ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. இதேபோல், இந்தியா-நேபாளம் இடையேயான எல்லை பிரச்னையும் பல ஆண்டாக தீர்க்கப்படாமலேயே உள்ளது. காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அப்பகுதிகள் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், அவை நேபாளத்தின் தார்சுலா மாவட்டத்தை சோ்ந்தவை என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது. எனவே, இவை சர்ச்சைக்குரிய பகுதிகளாகவே இருந்து வருகின்றன.

TH29Kali mapcol

இந்தச் சூழலில் காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா பகுதிகளை இணைத்து நாட்டின் புதிய அதிகாரப்பூர்வ வரைபடத்தை நேபாளம் வெளியிட்டுள்ளது. இதில் காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா மட்டுமின்றி உபி.யின் கோரக்பூர் அருகே உள்ள சாஸ்தா உள்ளிட்ட பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இது இந்தியா, நேபாளம் இடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதிகளுக்கு நேபாளம் திடீரென சொந்தம் கொண்டாட காரணம், திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு யாத்ரீகர்கள் பயணம் செய்வதற்கான நேரத்தை குறைக்கும் வகையில், உத்தரகண்ட் மாநிலம் தர்சுலாவில் இருந்து லிப்புலேக் பாஸ் வரையிலான 80 கிலோ மீட்டர் வரையிலான சாலையை இந்தியா அமைத்தது தான். இந்த சாலை சமீபத்தில் திறக்கப்பட்டது. இதற்கு நேபாள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து நேபாள அமைச்சரவையில் பேசிய அந்நாட்டு பிரதமர் கே.பி ஷர்மா வோலி, இந்தியாவின் பிடியில் உள்ள சர்சைக்குரிய பகுதிகள் நிச்சயமாக மீட்கப்படும் என தெரிவித்தார். மேலும் சீனா, இத்தாலி அதிக தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸை காட்டிலும் இந்தியா வைரஸ் அபாயகரமானது என விமர்சித்திருந்தார். மேலும், இந்தியாவை வீழ்த்த நேபாளத்தின் கூரகா படைகள் போதும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியதும், சில நேபாள ராணுவ வீரர்கள் இந்தியாவை குறித்து தரக்குறைவாக பேசியதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

images 28

இந்நிலையில், நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி, எல்லைப் பிரச்சனை தொடர்பாக பேச்சுவாரத்தை நடத்த இந்தியாவுக்கு நாங்கள் சரியான நேரத்தில் கோரிக்கை விடுத்து வருகிறோம். விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வுகாண முடியும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்த அவர் இது தொடர்பான வேறு வழிகளைப் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

சென்னையில் சமூக பரவல்..மத்திய அரசு தான் அறிவிக்கணும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

Wed Jun 10 , 2020
சென்னையில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று புதிதாக 1,392 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 25,937ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேருக்கு கொரோனா […]
corona virus

You May Like