சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

கொரோனாவை எதிர்த்து ஒன்றுபட்டு செயல்படுவோம்…மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்…

நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை நாம் அனைவரும் ஒன்றுபட்டு, உறுதியோடு நமது கடமைகளை ஆற்றினால் நம் நாடு வெற்றி காணும் என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Union minister Ravi Shankar Prasad

மத்திய தகவல் தொடர்பு, சட்டம் நீதித்துறை மற்றும் மின்னணு-தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பால் மிகப்பெரிய தொற்றுநோய் பரவி வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகி, நாடு முழுவதையும் முடக்கி போடும் நிலைக்கு தள்ளிவிட்டது.

இதுவரை கொரோனாவை முழுமையாக தீர்க்கும் மருந்தும் கண்டறியப்படவில்லை. இத்தகைய தருணங்கள் சவால் நிறைந்தவை. இருந்தபோதும் எந்த சவாலும் ஒரு வாய்ப்பையும் உருவாக்கிவிடும். ஏழை, பணக்காரர்கள்; உயர்ந்தவர்கள், சாமானியர்கள்; வெவ்வேறு சமயத்தினர்; இனத்தவர் என உலகின் அனைத்து மனிதர்களும் பாதிக்கப்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையில் புதிய தீர்மானமும், பொறுப்பும் உள்ளன.

பிரதமர் நரேந்திரமோடி, மக்களால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் நாட்டு மக்களுக்கு அவ்வப்போது வேண்டுகோள் விடுத்து வருகிறார். மக்களும் அதை ஏற்று செயல்படுகிறார்கள். கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இப்போதைய நெருக்கடியான சூழலில், மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். அத்துடன் ‘கோவிட் 19’ தொற்றினால் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றுவதற்காக ஆபத்தான நிலையில் களத்தில் இருந்து பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர், துணை மருத்துவர்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கைதட்டும்படியும் கேட்டு கொண்டார்.

அதையடுத்து, நாடு முழுவதும் பொது முடக்கத்தை 21 நாட்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பது என்ற அசாதாரண நடவடிக்கையை அவர் எடுத்தார். இந்திய மக்கள் வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக அவரது வேண்டுகோளை தங்களது கடமையாகவே ஏற்று தங்களது இல்லங்களிலேயே தங்கினர். இதனிடையில் அவரது இன்னோர் அழைப்பை ஏற்று, நாடு முழுவதும் விளக்குகளையும் தீபங்களையும் ஏற்றி, சவாலான தருணத்தில் ஒற்றுமையையும் சக்தியையும் நிலைநாட்டினர்.

கொரோனா வைரசுக்கு எதிரான நமது போராட்டத்தை மேற்கொள்ளும் இந்த சவாலான சமயத்தில் நாம் ஒன்றுபட்டு, உறுதியோடு நமது கடமைகளை ஆற்றினால், நம் நாடு வெற்றி காணும். அதையடுத்து நாம் ஒன்றுபட்டு செயல்பட்டு, தேசத்தை உச்ச சாதனை நிலைக்கு இட்டு செல்லலாம்.

நமது பிரதமர் நரேந்திர மோடியின் பல முன் முனைப்புகளும், சில மாநில அரசுகளின் முயற்சிகளும் உலக அளவில் வரவேற்கப்படுகின்றன. நிச்சயம் இந்த சோதனையை வென்று வருவோம் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

இந்தியாவில் கடந்த ஆறு நாட்களில் கொரோனாவால் இவ்வளவு பாதிப்பா?... அதிர்ச்சியில் உறைந்த மக்கள்...

Wed Apr 15 , 2020
இந்தியாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது கடந்த ஆறு நாட்களில் இருமடங்காக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய இந்த உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி அனைவரையும் கொன்று குவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் படிப்படியாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் இவற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தனிமைப்படுத்துதல் முக்கியம் என்பதால் நாடு […]
2021 பிப்ரவரியில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு 1.05 கோடியாக இருக்கும்...மத்திய அரசின் குழு தகவல்!

You May Like