மேற்கு வங்க மாநிலத்தில் ஐ டி ஐ, இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள், பிஎச்டி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்!

மேற்கு வங்க கிராமப்புற மேம்பாட்டு கழகத்தின் சார்பாக காலியாக உள்ள 14 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ப்ரோக்ராம் கோஆர்டினேட்டர், சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட், ப்ரோக்ராம் அசிஸ்டன்ட், ஃபார்ம் மேனேஜர், உதவியாளர் டிரைவர் ஆகிய பணியிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு இந்திய குடியுரிமை பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ப்ரோக்ராம் கோஆர்டினேட்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு 40 ஆகும். இதர பணிகளுக்கு உச்சபட்ச வயது வரம்பு 32. ப்ரோக்ராம் கோஆர்டினேட்டர், சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட் , ப்ரோக்ராம் அசிஸ்டன்ட் மற்றும் பார்ம் மேனேஜர் ஆகிய பணிகளுக்கு சம்பளமாக ₹ 9000 – 40500/-  ரூபாய் வரை வழங்கப்படும். ஸ்டெனோகிராபர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு சம்பளமாக ₹ 7100 – 37600/- ரூபாய் வரை வழங்கப்படும். டிரைவர் பணிகளுக்கு சம்பளமாக ₹ 5400 – 25200/- ரூபாய் வரை வழங்கப்படும். உதவியாளர் பணிகளுக்கு சம்பளமாக ₹ 4900 – 16200/-ரூபாய் வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரோக்ராம் கோஆடினேட்டர் பணிகளுக்கு வேளாண்துறை மீன்வளத்துறை மற்றும் விலங்கியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பிஹெச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் துறை சார்ந்த அனுபவம் ஐந்து வருடங்களாக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட் பணிகளுக்கு வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ப்ரோக்ராம் அசிஸ்டன்ட் பணிகளுக்கு வேளாண் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பார்ம் மேனேஜர் பணிகளுக்கும் வேளாண் துறையில் இளங்கலை பட்டம் அவசியம். அலுவலகப் பணி உதவியாளருக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பது கணினி பற்றிய புரிதல் அவசியமாக இருக்க வேண்டும். ஸ்டெனோகிராபர் பணிகளுக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பது தட்டச்சு சான்றிதழ் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. டிரைவர் பணிகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகன ஓட்டுதலில் அனுபவம் பெற்று இருப்பதோடு மோட்டார் மெக்கானிக் அல்லது தொழில் கல்வியிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பணிகளுக்கு ஐடிஐ அல்லது அதற்கு இணையான தொழில் கல்வியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் கல்விச்சான்றிதழ்கள் வேலைவாய்ப்பின் முன்ன அனுப்புங்கள் போன்ற ஆவணங்களையும் சேர்த்து சுய சான்றளிக்கப்பட்ட பிரதிகளையும் அவற்றுடன் இணைத்து நிர்வாகச் செயலர், மேற்கு வங்க விரிவான பகுதி மேம்பாட்டுக் கழகம், மிருத்திகா பவன், 18/9, DD பிளாக், துறை-I, சால்ட் லேக், கொல்கத்தா – 700064.” என்ற முகவரிக்கு 07.03.2023 தேதிக்குள் கிடைக்குமாறு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற விபரங்களை அறிய https://wbcadc.com/ என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Baskar

Next Post

கர்நாடக துப்பாக்கி சூடு சம்பவ உயிரிழப்பு...! ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்...!

Sat Feb 18 , 2023
கர்நாடக மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் உயிரிழந்த நபர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அன்று காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்றார்கள் […]

You May Like