90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? பிள்ளைகளின் போனிற்கு வந்த தாயின் உல்லாச வீடியோக்கள்..! கள்ளக்காதலனின் கொடூர செயல்..!

“எதற்காக இன்னும் காத்திருக்கிறீர்கள்.. உங்கள் எஜமானரின் குரலுக்காகவா..” தமிழக முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி..

ஊரடங்கு நீட்டிப்பு விவகாரத்தில் மற்ற மாநிலங்கள் தங்கள் முடிவை அறிவித்து வரும் நிலையில், எதற்காக இன்னும் காத்திருக்கிறீர்கள் என்று தமிழக முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

eps and kamal

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது மத்திய அரசு. அந்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. மீண்டும் புதிய விதிமுறைகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. இதுவரை 1075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona-virus-lockdown_

இந்நிலையில் ஒடிசா மற்றும் பஞ்சாப். மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இந்த சூழலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “மற்ற மாநில முதல்வர்கள் ஊரடங்கு குறித்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் போது, எதற்காக காத்திருக்கிறீர்கள் மாண்புமிகு முதல்வரே.

உங்களின் எஜமானரின் உத்தரவுக்காகவா? என் குரல் என்பது மக்கள் மத்தியிலிருந்து வரும் குரல். நாற்காலியில் அமர்ந்திருந்தது போதும். எழுந்திருங்கள்,” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

1newsnationuser1

Next Post

கொரோனா பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கு 5 நாட்கள் விடுமுறை... திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி...

Mon Apr 13 , 2020
கொரோனா பாதுகாப்பு பணியில் ஷிப்ட் மூலம் ஓய்வின்றி பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சக்திவேல் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கினர். இருப்பினும், காவல்துறையினர்,மருத்துவர்கள்,செவிலியர்கள் என அனைவரும் பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஒய்வின்றி ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு தமிழகம் முழுவதும் மூன்று ஷிப்ட்டாக பணி போடப்பட்டுள்ளது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் […]
dindugul five days leave police for corona

You May Like