இனி மேல் தமிழ்நாட்டுல மருத்துவ கழிவு கொட்டினால் அவ்வளவு தான்! பாயப்போகும் குண்டாஸ் சட்டம்!

தமிழ்நாட்டுக்குள் சட்டவிரோதமாக மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தென் மண்டல பசுமை தீர்ப்பாணயத்தில் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் எல்லை பகுதிக்குள் பிற மாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் லாரிகளில் கடத்திவரப்பட்டு கூட்டப்படுகின்றன. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு வனவிலங்குகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மறுசுழற்சி செய்யப்பட வேண்டிய மருத்துவ கழிவுகளை ஆள் வரவும் இல்லாத பகுதிகளில் கொட்டி செல்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு நோய் கிருமி தொற்று போன்ற அபாயகரமான விளைவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆனைமலை பகுதிகளில் மருத்துவமனை கழிவுகளையும் மருத்துவக் கழிவுகளையும் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கினை தேசிய பசுமை தீர்ப்பாயம் நடத்தி வந்தது.

மேலும் இந்த வழக்குகள் தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது தீர்ப்பாணயம். இது தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் மத்திய பசுமை தீர்ப்பாணையத்திற்கு அளித்தார். அந்த அறிக்கையில் தமிழகம் கேரளா மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றியும் அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்ட முயற்சித்தது தொடர்பான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது அபராதங்கள் விதித்துள்ளதாகவும் இது போன்ற நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கழிவுகள் பொட்ட போடுவது அதிகரித்து வருவதால் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது குண்டல சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் குண்டர் சட்டத்தின் வரம்பை பொது நலன் கருதி விரிவுபடுத்த உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு உதவியுடன் எடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Baskar

Next Post

”10 நிமிடத்தில் 3 குவாட்டர்”..!! நண்பர்களிடம் பெட் கட்டிய ஆட்டோ ஓட்டுநர்..!! பரிதாபமாக பறிபோன உயிர்..!!

Thu Feb 16 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ஜெய் சிங் (45) என்ற ஆட்டோ ஓட்டுனர், மதுவுக்கு அடிமையானார் என்று கூறப்படுகிறது. இவர் சக நண்பர்களான போலா, கேசவ் ஆகியோருடன் இணைந்து மது அருந்த சென்றுள்ளார். ஆனால், அன்று இரவு ஜெய் சிங் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, ஜெய்சிங்கின் மகன் அவரை தேடியுள்ளார். சாலையில் விழுந்து கிடந்த ஜெய் சிங்கை கண்டுபிடித்த மகன் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே […]

You May Like