தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க என்ன அவசியம்..? இடைக்கால தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு..

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ கடந்த 2013-ம் ஆண்டு, நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை.. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை பணி கிடைக்கவில்லை.. இந்நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப தமிழக அரசு கடந்த 23-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது..

ஆனால் தற்காலிக பணியிடங்களை நிரப்ப முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை.. அந்தந்த மாவட்ட கல்வி அலுவர்கள் தங்களுக்கு தேவையானவர்களை பணியில் நியமிக்க வாய்ப்புள்ளது.. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.. இதனால் மாணவர்களும் பாதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்.. எனவே தமிழக அரசு கடந்த 23-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதுடன், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடையும் விதிக்க வேண்டும்..” என்று கூறியிருந்தார்..

இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உயர்நீதிமன்றம், தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியனமத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரி தமிழக அரசு முறையீடு செய்தது.. மேலும் இடைக்கால தடையால் மதுரைக்கிளையின் வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்யமுடியவில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.. அப்போது குறுக்கிட்ட நீதிபதி எந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர் என்று கேள்வி எழுப்பினார்.. அதற்கு டெட் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தகுதியானவர்களையே தற்காலிக ஆசிரியர்களாக நியமிப்பதாக அரசு தரப்பு தெரிவித்தது..

அப்போது நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே..? தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க என்ன அவசியம்..? என்றும் கேள்வி எழுப்பினார். வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ம் தேதி வழக்கு விசாரிக்கப்படும் என்று கூறிய நீதிபதி தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்றும் தெரிவித்தார்…

Maha

Next Post

பள்ளி மாணவியை மிரட்டி 2 ஆண்டுகளாக பலாத்காரம்..! திடீரென ஏற்பட்ட வயிற்று வலியால் பெற்றோர் அதிர்ச்சி..!

Tue Jul 5 , 2022
பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து 6 மாதம் கர்ப்பமாக்கிய நபரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கீழபாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 42). இவர் அங்குள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவியை மிரட்டி மகேந்திரன் பாலியல் பலாத்காரம் […]

You May Like