இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

அதென்ன 144 தடை உத்தரவு..? தடையை மீறினால் என்ன நடக்கும்..? இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு..?

கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் மூடப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார். சரி.. 144 தடை உத்தரவு என்றால் என்ன..? தடை நேரத்தில் அரசு உத்தரவுகளை மீறினால் என்ன நடக்கும்.. என்னென்ன சேவைகள் பொதுமக்களுக்கு கிடைக்கும்..? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

section 144

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கவும், உயிர்சேதம் எதுவும் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதியில் 5-க்கும் மேற்பட்ட மக்கள் கூடுவது தவறு. ஒருவேளை மீறி, அங்கே அதிக நபர்கள் கூடினால், அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். 144 தடை உத்தரவை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

பொதுவாக போராட்டங்களில் ஏற்படும் வன்முறையின் போது, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கவே இந்த உத்தரவு அதிகமாக பிறப்பிக்கப்படும். அல்லது பொது மக்கள் அதிகமாக கூடினால் அங்கு ஏதாவது பிரச்சனை ஏற்படக்கூடும் என்று அரசு கருதும் பட்சத்தில் இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்.

section 144

ஆனால் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் இந்த சூழலில், வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும், மக்களின் பாதுகாப்பு கருதியும் ஏற்கனவே டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்திலும் நாளை அதாவது 24.03.2020 மாலை 6 மணி முதல் 31.03.3020 வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சரி.. இந்த 144 தடை உத்தரவினால் என்னென்ன இயங்கும், என்னென்ன இயங்காது என்று பார்க்கலாம்.. இந்த அறிவிப்பை தீவிரமாக அமல்படுத்த 144 சட்டப்பிரிவின் கீழ் ஆட்சியர், காவல் ஆணையர்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, கார், ஆட்டோ, டாக்சி ஆகியவை இயங்காது.

chennai lockdown

பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் மட்டுமே இயங்கும். இவை தவிர அனைத்து கடைகளும் , வணிக வளாகங்களும் இயங்காது. அத்தியாவசிய துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது.

தனியார் நிறுவனங்கள், ஐடி பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். எனினும் அத்தியாவசிய பணிகளையும், மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனஙக்ள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்

அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும். அத்தியாவசிய கட்டட பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்படும்.

காவல்துறை,சுகாதாரத்துறை, நீதிமன்றங்கள், சிறைத்துறை, உள்ளாட்சி அமைப்பு, தீயணைப்புத்துறை, மாவட்ட நிர்வாகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மெட்ரோ நீர், மாநகராட்சி அலுவலகங்கள், சுகாதார நிலையங்கள் ஆகியவை இயங்கும்.

janatha curfew n

வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கி இருக்கும் பணியாளர்களின் நலன் கருதி பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதி. அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும்.

இது மக்களின் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட சமூக விலகம் என்ற நடவடிக்கை தானே தவிர, மக்கள் பீதியடைய தேவையில்லை. அரசு அறிவுறுத்தியுள்ள காலம் வரை வெளியே செல்லாமல் இருப்பதனால், நமக்கு மட்டுமின்றி, நம்மால் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதையும் தடுக்க முடியும்.

1newsnationuser1

Next Post

சிறையில் இருக்கும் ஹாலிவுட் தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று..!

Tue Mar 24 , 2020
பாலியல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்விக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஹாலிவுட் திரையுலகில் பல வெற்றிப்படங்களை தயாரித்து புகழ் பெற்றவர் ஹார்வீ வெயின்ஸ்டீன் (வயது 68). இவர் படப்பிடிப்பின்போது பல நடிகைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக பிரபல நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ரோஸ் மெக்கவுன், கெவ்னித் பேல்ட்ரோ உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட நடிகைகள் தயாரிப்பாளர் […]
202003240438438165 Corona vulnerability to Hollywood producer in jail SECVPF

You May Like