சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..!

மத்திய அரசின் ஊரடங்கு, மாநில அரசின் 144 தடை இவ்விரு சட்டங்கள் சொல்வது என்ன?

curfew6 1

உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு என பிரதமர் நரேந்திரமோடி அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதற்கு முன்னதாகவே  பல மாநில அரசுகள் 144 தடை உத்தரவினை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாநில அரசுகள் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன? ஊரடங்கிற்கும் , 144 தடை உத்தரவிற்கும்  உள்ள வித்தியாசம் என்ன? மக்கள் எந்த சட்டத்தின் படி வழிநடக்க வேண்டும் என்பது பற்றி விரிவாகப்பார்க்கலாம்.


இந்தியா முழுவதும் தற்போது அனைத்து மக்களும் உபயோகிக்கூடிய ஒரு சொல் ஊரடங்கு என்றாகிவிட்டது. இது பிரிட்டீஷ் ஆட்சியின் போது  இந்திய விடுதலை வீரர்களை ஒடுக்கும் வகையில் தொடங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து நாட்டில் நடக்கும் சாதிக்கலவரங்கள், வன்முறைகள் போன்றவற்றை ஒடுக்குவதற்காகவும் ஊரடங்கு பயன்பட்டுவந்தது.  ஆனால் தற்போது பெருந்தொற்றான கொரோனாவின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்த இந்திய அரசால்  அடுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.    பிரிவு 144 இன் கீழ் வழக்கமான தடை உத்தரவுகளின்  மொத்த  விரிவாக்கமாக ஊரடங்கு உத்தரவு உள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவு எந்தவொரு சட்டபூர்வமான அந்தஸ்தையும் கொண்டிருக்கவில்லை . என்பது குறிப்பிடத்தக்கது.

144 section 3

தற்போது 144 தடை உத்தரவு எவ்வகையில் நடைமுறைப்படுகிறது என்று பார்க்கலாம்….

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 144-ஆவது பிரிவே, 144 தடை உத்தரவு என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.

இந்த சட்டப்பிரிவின்படி பொதுமக்கள், நான்கு அல்லது அதற்கு மேலானோர், பொது இடத்திலோ, மக்கள் கூடுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியிலோ கூடுவது குற்றமாக கருதப்படும்.

குறிப்பிட்ட சில பகுதிகளில் அல்லது காவல்துறை வரையறுத்துள்ள இடங்களில் நான்கு அல்லது அதற்கு மேலானோர் கூடுவதற்கு இந்த சட்டப்பிரிவு தடை விதிக்கும் அதே சமயம், ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவசர தேவைக்காக செல்வதை இந்த சட்டப்பிரிவு தடுக்காது.

ஆயுதங்களை கொண்டு வரவும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு பொருளையும் வைத்திருக்கவோ, அவற்றைக்கொண்டு பொதுவெளியில் நடமாடவோ அனுமதி கிடையாது.

அதனை மீறி பொது வெளியில் கூடுவோர்கள் யாராக இருந்தாலும் காவல்துறையினர் அவர்கள் மீது IPC 188 ன்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் அதிகாரம் உள்ளது. இதற்கு ஜாமீன் வழங்கப்படமாட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 144 தடை உத்தரவினை மீறி பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடினால் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல தடியடியும், தேவைப்படும் பட்சத்தில் துப்பாக்கி சூடு நடத்தக்கூட மாவட்ட நிர்வாகத்திற்கு சட்டப்படி அனுமதி உள்ளது.

1newsnationuser3

Next Post

சமூக விலகலை பின்பற்றிய மத்திய அமைச்சர்கள்..!

Wed Mar 25 , 2020
இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் இடைவெளி விட்டு அமர்ந்து சமூக விலகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தல் மட்டுமே. தற்போது, இந்தியா முழுவதும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே இதை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் சமூக […]
202003251426131591 Tamil News Ministers practice social distancing at cabinet meet SECVPF

You May Like