மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

சூழலியல் தாக்க மதிப்பீடு (EIA 2020) அப்படி என்றால் என்ன? ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்..?

கடந்த சில நாட்களாக பெரிய அளவில் எதிர்ப்பு அலைகளை கிளப்பிய இந்த EIA 2020 அறிக்கை பற்றி சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்.

one in a billion

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு:

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு என்பது ஒரு பெருநிறுவனமோ அல்லது தொழிற்சாலைகளோ அமைக்கப்படும் போது அவை சுற்றுசூழலுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்துகிறாதா என ஆராயப்பட்டு அதற்கு அனுமதி வழங்கவோ அல்லது மறுக்கவோ வகை செய்யும் ஒரு வரையறை.

சூழலியல் தாக்க மதிப்பீடு 2006: இந்தியாவில் இத்தகைய பெரு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் போது சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் முறையாக அனுமதி பெற வேண்டும். இதன்படி சூழலியல் தாக்க மதிப்பீடு 2006ன் படி இந்த நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் திட்டப்பணிகள் குறித்து முதலில் அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட வேண்டும். அரசு சார்பில் அமைக்கப்படும் குழு இதனை ஆய்வு செய்து சுற்றுசூழலுக்கு தீங்கு ஏற்படமால் இருந்தால் அனுமதிக்கவோ அல்லது தீங்கு ஏற்பபடுகிறது என உறுதி செய்யப்பட்டு மறுக்கவோ முடியும்.

இதற்கு ஒரு உதாரணமாக நாம் குடியிருக்கும் பகுதிக்கு ஒரு இரசாயன தொழிற்சாலை அமைக்க ஒரு நிறுவனம் விரும்பினால் அவை முறையாக ஒரு அறிக்கை தயார் செய்து இந்த தொழிற்சாலை அமைப்பதால் இங்குள்ள சுற்றுசூழலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என உறுதிபடுத்தி அனுமதி கோர வேண்டும். அப்போது அரசு சார்ந்த குழு ஒன்று இதனை குறித்து ஆய்வு செய்து இந்த தொழிற்சாலை அமைய அனுமதி அளிக்கலாமா வேண்டாமா என ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும். தீங்கு ஏற்படவில்லை என்று உறுதிபடுத்தப்பட்டால் மட்டுமே அந்த தொழிற்சாலையை நம்முடைய குடியிருப்பு பகுதியில் அமைக்க முடியும்.

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020: தற்போது எதற்கு இந்த சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 என கேள்வி எழும்பும். இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த பேரிடர் வேளையில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி மத்திய அரசு சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2006ல் சில திருத்தங்கள் செய்து சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 என்ற புதிய வழிமுறை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதற்கான மக்கள் கருத்து கேட்பு நாட்களும் இந்த பேரிடர் வேளையில் கரைந்து கொண்டு செல்கிறது.

திட்டத்தில் உள்ள மாற்றங்களும் சந்தேகங்களும்:(#WithdrawEIA2020)

மாற்றம்: இந்த திட்டத்தின் படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தேசிய நலன் சார்ந்த எந்த ஒரு திட்டத்திற்கும் சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கை சமர்பிக்க தேவை இல்லை
சந்தேகம்: பின்னாளில் எந்த ஒரு திட்டத்தையும் தேசிய நோக்குடன் இருக்கிறது என புனையப்பட்டு மக்களின் கருத்தை கேட்காமலும் சுற்றுசூழல் தாக்கத்தை கருத்தில் கொள்ளாமலும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவங்கள் அமைக்கபட்டால்..?

மாற்றம்: தொழிற்சாலைகள் அமைவது குறித்து மக்களின் கருத்து கேட்பு பொதுக்கூட்டம் 30 நாட்களில் இருந்து 20 நாட்களாக குறைப்பு
சந்தேகம்: இது தான் ஜனாயக படுகொலையோ..?

மாற்றம்: சுற்றுசூழல் மதிப்பீடு அறிக்கை இல்லாமல் ஒரு திட்டத்தை தொடங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள திட்டத்தை விரிவுபடுத்தி அமைத்துக் கொள்ளவோ முடியும். அதற்கு பின் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
சந்தேகம்: இந்த நடைமுறை இல்லாத காலத்திலேயே ஒரு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைக்க எத்தனை உயிர்கள் காவு கொடுக்கபட்டது..? அதற்கான நீதி இன்னும் நிலுவையில் தான் உள்ளது.

இந்த திருத்தங்கள் ஜனநாயக படுகொலையா?

சூழலியல் செயற்பாட்டாளர்களும் சில அரசியல் பிரமுகர்களும் இதனை எதிர்ப்பதற்கு காரணம் இது முழுக்க முழுக்க பெரு நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும் மாற்றங்கள் என்பதால் தான். இதனை சுற்றுசூழல் ஆர்வலர்களும் பல அரசியல் கட்சிகளும் கிட்டதட்ட 63 முன்னாள் உயர் அதிகாரிகளும் இதனை எதிர்கின்றனர். இதனை எதிர்த்து பிரதமருக்கு கடிதமும் எழுதி அனுப்பட்டுள்ளது. இந்த வரைவு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், “இந்த விதிமுறை சுற்றுசூழல் விதிகளே ஒரு தேவையற்ற சுமை என்பது போலவும் இது நில ஆக்கிரமிப்புக்கு வழி வகுப்பது போலவும் இருக்கிறது” என சாடியுள்ளார். மேலும் “மாநில சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு குழுவின் தலைவரையும் உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிப்பது கூட்டுறவு கூட்டாச்சி தத்துவத்தை சவப்பெட்டியில் தள்ளி அடிக்கும் கடைசி ஆணி” என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அரசின் விளக்கம் என்ன?

வழக்கம் போல் அனைத்து குற்றசாட்டுகளையும் மறுக்கும் அரசு இவை ஆதாரமற்றது என ஒரே பதிலை கூறி முடிக்கிறது. மேலும் இந்திய சுற்றுசூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஜெயராம் ரமேஷுக்கு எழுதிய கடிதத்தில், “உங்கள் கருத்துகளை குறித்துக் கொள்கிறேன். இந்த வரைவு தொடர்பான அறிக்கை பொது தளத்தில் இருக்கிறது. இன்னும் 15 நாட்களுக்குள் உங்கள் ஆலோசனையை வழங்கலாம். அறிக்கை இறுதி செய்யப்படுவதற்கு முன்பு அனைத்து ஆலோசனைகளும் கருத்தில் கொள்ளப்பட்டு நாடாளுமன்றமும் நிலைக்குழுக்களும் ஒப்புதல் அளித்த பின்னரே அரசு முடிவு எடுக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதில் பொது தளத்தில் இருப்பதாக சொல்லப்படும், இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிட வேண்டிய இந்த அறிக்கை குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி.. மனிதர்களுக்கு செலுத்தும் இறுதிக்கட்ட பரிசோதனைக்கு தயாராகும் இந்தியா..

Tue Jul 28 , 2020
ஆக்ஸ்போர்டு உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட மனித சோதனைகளுக்காக நாடு முழுவதும் ஐந்து இடங்கள் தயாராக உள்ளதாக பயோ டெக்னாலஜி துறை செயலாளர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் அதே வேளையில், தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தயாரித்த தடுப்பூசியும் […]
ஆக்ஸ்போர்டு

You May Like