
தமிழகத்தில் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என அமல்படுத்தி வரும் நிலையில், கொரோனாவினை தடுக்க என்ன நடவடிக்கையை அரசு எடுக்கப்போகிறது? என மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டு மொத்த தமிழகமும் கடந்த இரண்டரை மாதங்களுக்கு பிறகு ஊரடங்கிலிருந்து மீளத்தொடங்கியிருப்பதாகவும், அதற்குள் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்வது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை பரவலாக மேற்கொண்டு உண்மை நிலையினை தெளிவுப்படுத்தியிருந்தால், சென்னையை விட்டு சென்றால் போதும் என்ற மக்களின் மனநிலையை தெளிவுப்படுத்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கிலாவது, தமிழக அரசு அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கையை எடுக்கவுள்ளது என்பது குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.