ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு..? அவருக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகிறது தெரியுமா..?

UPSC தேர்வானது இந்தியாவின் கடினமான தேர்வாகும்.. இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் மட்டுமே, ஐஏஎஸ் (IAS), ஐஎஃப்எஸ்( IFS) மற்றும் ஐபிஎஸ் (IPS) ஆக முடியும். ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவம், லட்சக்கணக்கான மாணவர்கள் UPSC தேர்வை எழுதுகிறார்கள், ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள். ஒருவர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றால், அவர் இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரியாகலாம்.. நன்னடத்தை காலம் முடிந்ததும், ஐஏஎஸ் அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வழங்கப்படும். மேலும் ஐஏஎஸ் அதிகாரி, மாநில நிர்வாகப் பிரிவு முழுவதற்கும் தலைமை தாங்கும், துறை ஆணையராகவும் பதவி உயர்வு பெறலாம்.

சரி.. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது, என்னென்ன சலுகைககள் உள்ளது தெரியுமா..? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. 7வது ஊதியக்குழுவின் படி, ஐஏஎஸ் அதிகாரியின் அடிப்படை ஊதியம் ரூ.56100. சம்பளம் தவிர, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பயணப்படி, அகவிலைப்படி உள்ளிட்ட இதர சலுகைகளும் கிடைக்கும். பல ஆண்டுகள் பணிபுரியும் போது, ஐஏஎஸ் அதிகாரிகளின் சம்பளம் 1,50,000 வரை உயரும். ஜூனியர் ஸ்கேல், சீனியர் டைம் ஸ்கேல் மற்றும் ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கிரேடு முதல் நிலைகள் இருக்கும். மறுபுறம், ஒரு ஐஏஎஸ் அதிகாரி கேபினட் செயலாளர் அந்தஸ்தை அடைந்தால், அவருக்கு ரூ 2,50,000 வரை சம்பளம் கிடைக்கும்.

ஐஏஎஸ் அதிகாரிக்கு வழங்கப்படும் சலுகைகள்

  • ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் பதவி, ஊதியம் மற்றும் பணி மூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அரசு பங்களாக்கள் அல்லது குடியிருப்புகள் ஒதுக்கப்படுகின்றன.
  • ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி மற்றும் பதவியின் அடிப்படையில் வாகனங்களும் ஒதுக்கப்படுகின்றன.
  • ஐஏஎஸ் அதிகாரிகள் இலவச அல்லது அதிக மானியத்துடன் மின்சாரம், தண்ணீர், எரிவாயு மற்றும் தொலைபேசி இணைப்புகளைப் பெறுகிறார்கள்.
  • ஐஏஎஸ் அதிகாரிகள் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை அனுபவிக்கின்றனர்.

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் அவரிகளின் குடும்பத்தினருக்கும் 3 ஊர்க்காவல் படையினரும், 2 மெய்க்காப்பாளர்களும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். மேலும் அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால், STF கமாண்டோக்களின் பாதுகாப்பும் கிடைக்கும்.

அதிகாரப்பூர்வ அல்லது அதிகாரப்பூர்வமற்ற காரணங்களுக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் பயணம் செய்தால், அவர்கள் அரசாங்க குடியிருப்புகள் அல்லது விருந்தினர் இல்லங்களில் மலிவு விலையில் தங்கலாம். மேலும் ஐஏஎஸ் அதிகாரிக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை அவர்களின் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்த முடியாது; அதை அரசு அல்லது உத்தியோகபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஐஏஎஸ் அதிகாரிகள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தினால், அவர்கள் அரசாங்கத்திற்கு சில பெயரளவு கட்டணங்களை செலுத்த வேண்டும். ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட வேலைக்காக அதிகாரப்பூர்வ வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 1 ரூபாய் செலுத்தலாம்.

Maha

Next Post

தமிழகமே...! அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்...! வானிலை மையம் கணிப்பு.‌‌..!

Wed Feb 8 , 2023
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் […]
அதிர்ச்சி..! தமிழக போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்கள் பல மடங்கு உயர்வு..!

You May Like