இறப்புக்கு பின்னரான வாழ்வில் இளைஞர்கள் மட்டுமே இருப்பதாக மரண விளிம்பு வரை சென்று வந்த ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் செயற்கை நுண்ணறிவு பெற்ற முன்னேறிய உலகம். ஆனால், இப்போதும் தெளிவான விளக்கம் அளிக்க முடியாத பல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்று மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும்? நாம் எங்கு சொல்வோம்?

இந்த கேள்விக்கு ஆன்மீக ரீதியாக விடை தேடினால் நமக்கு கிடைப்பது, மரணத்திற்கு பின் சொர்க்கம், நரகம் என இரண்டு உள்ளது அல்லது மறுபிறவி எடுப்போம் என்பது போன்ற பதில்களே.

இதே கேள்விக்கு அறிவியல் ரீதியாக விடை தேடினால், மூச்சு நின்றபின் மனிதனின் செயல்பாடு முடிவுக்கு வரும் என்பதே
ஆனால், மரணத்திற்கு பின்னர் வாழ்க்கை உள்ளது என அவ்வப்போது மரணத்தின் விளிம்புக்கு சென்று வந்ததாக கூறும் பலர் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது ட்ரூ பி என்பவர் தன்னுடைய அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது.
முதலில் ட்ரூ பி பற்றியும் பற்றியும் பின் அவர் கூறிவற்றையும் பார்ப்போம் .
ரூ பி மோட்டார் சைக்கிளில் சென்ற போது அதன் மீது ஒரு கார் மோதியதால் மரணத்தின் விளிம்புக்கு சென்றுள்ளார். அதன் பின் அவர் மருத்துவ ரீதியாக இறந்தார் இது அறிவியல் ரீதியாக ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று.

அதன்பின் நடந்தது பற்றி ட்ரூ பி கூறியது; மரணத்துக்கு பின் தான் ஒரு பிரகாசமான கூடாரத்தைக் கண்டதாக கூறிய அவர் அங்கு 30 வயதிற்குட்பட்ட பல இளைஞர்களை அங்கு கண்டதாகவும் மேலும் அந்த மக்கள் அனைவரும் மகிழ்ச்சியானவர்கள் என்றும், அந்த மந்திர உலகத்திலிருந்து திரும்பி வர தனக்கு மனநிலைஇல்லை என்றும் கூறி உள்ளார்.
இதுகுறித்து மருத்துவ வல்லுநர்களின் கூறிய தகவலின்படி, மனித மூளை உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளின் போது உயிர்வாழும் தந்திரத்தை கடைப்பிடிக்கும், அப்போது இதுபோன்ற வித்தியாசமான காட்சி பிரமைகளை ஏற்படுத்துவது இயல்புதான் என கூறியுள்ளனர்.