அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு எப்போது பதில் அளிப்பீர்கள்..? பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் கேள்வி..

மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, ஆறுதல் தரும் வகையிலான பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப் போகிறீர்கள் என்று, பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

stalin modi

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக, இன்று வெளியிட்ட அறிக்கையில், “கரோனா நோய்த் தொற்று இந்தியாவில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை, இரண்டாவது கட்டமாக, மே 3-ம் நாள் வரை மேலும் 19 நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

நோய்த் தொற்று உள்ளவர்களை முற்றிலுமாகக் கண்டறிய முடியாத நிலையில், பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படாத நிலையில், ஊரடங்கை நீட்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை. மக்கள் தங்களைத் தனிமைப்படுத்தி நோய்த் தொற்றிலிருந்து காத்துக் கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக பிரதமரின் உரை அமைந்துள்ளது. ஏழு வகையான அறிவுரைகளையும் மக்களுக்கு பிரதமர் வழங்கியுள்ளார். அதே நேரத்தில், நாட்டு மக்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது, அறிவுரைகள் மட்டுமல்ல; மக்கள் உயிர்வாழ்வதற்கான நிவாரண உதவிகள், பொருள் உதவிகள், பண உதவிகள்தான். அத்தகைய எந்த அறிவிப்பும் பிரதமர் இதுவரை ஆற்றிய உரைகளிலும் இல்லை; இன்றைய உரையிலும் இல்லை!

முடக்கப்பட்ட அல்லது முடங்கி இருக்கும் இந்தச் சமூக மக்களுக்கு பிரதமரோ அல்லது மத்திய அரசோ செய்யப் போகின்ற உதவிகள், தரப்போகும் சலுகைகள், காட்டப் போகும் கருணைகள் என்ன என்பதுதான் மக்கள் மனங்களில் உள்ள எதிர்பார்ப்பும், ஏக்கமும். வழக்கம் போல் அதில் ஏமாற்றமே!

Modi

கரோனா தொற்றில் இருந்து தங்களை மக்கள் பாதுகாத்துக் கொள்வார்கள். அத்தகைய மக்களை, பொருளாதார ரீதியாகப் பாதுகாக்க மத்திய அரசு தனது திட்டங்களை உரிய காலத்தில் ஏற்கெனவே அறிவித்திருக்க வேண்டுமே!

வறுமையும், ஏழ்மையும், வேலையில்லாத் திண்டாட்டமும், பலவீனமும், சமூக ஏற்றத் தாழ்வும், சாதியப் புறக்கணிப்பும் உள்ள இந்தியச் சமூகத்தில் வாழும் மக்களில் பெரும் பகுதியினர், அன்றாட வேலை செய்து அதில் கிடைக்கும் கூலியைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள்.

அவர்களது வாழ்க்கை, இந்த ஊரடங்கால், மொத்தமாகச் சிதைந்துவிட்டதே, அவர்கள் தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியப் பிரதமர் செய்யப் போகும் உதவிகள் என்ன?

அத்தகைய லட்சோபலட்சம் இந்தியக் குடிமக்களைக் காப்பாற்றும் பொறுப்பை மத்திய அரசு எடுத்துக்கொள்ள வேண்டாமா? சீனாவில் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது என்றால் அம்மக்கள் மொத்தமாக வீட்டுக்குள் முடங்கியது மட்டுமல்ல காரணம், முடங்கி இருந்த மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசே செய்தது; அதனால் அவர்களால் நிம்மதியாக வீட்டுக்குள் இருந்திட முடிந்தது. அத்தகைய சூழ்நிலையை இந்தியாவில் உருவாக்கி இருக்க வேண்டும்.

“மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ.30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டினுடைய, நாட்டு மக்களுடைய பணம், நம்முடைய பணம்; இந்த 30 லட்சம் கோடியில் ரூ.65 ஆயிரம் கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தரமாட்டாரா?” என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேட்கும் கேள்வியில் உள்ள நியாயம், தர்மம், 21 நாட்கள் கடந்த பிறகும் பிரதமருக்குப் புரியவில்லையா?

corona virus n

தமிழக அரசு கேட்ட நிதியைத் தரவில்லை; நாடாளுமன்ற உறுப்பினர்களது தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து; மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் வாங்கக் கூடாது என்று மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளாக இல்லை.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும் மருந்துகள், அவர்களைக் காக்கும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், நோயைக் கண்டறியும் கருவிகள், இவற்றை மாநிலங்களுக்கு எப்போதுதான் தரப்போகிறீர்கள் என்பதே, இப்போது மக்கள் உங்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகள், உங்களிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்பும் பதில்கள்!

மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, ஆறுதல் தரும் வகையிலான பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப் போகிறீர்கள்? என்பது தான் நான் இன்று முன்வைக்க விரும்பும் கேள்வியாகும்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 500 அபராதம் : காவல்துறை எச்சரிக்கை

Tue Apr 14 , 2020
மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு கடந்த மார்ச் 24ஆம் தேதி அறிவித்திருந்த நாடு முழுவதுமான ஊரடங்கு உத்தரவு இன்று இரவுடன் முடிவடைய இருந்த நிலையில், மீண்டும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை முக்கிய […]
சென்னை

You May Like