’டாக்டராக இருந்தாலும் ஆக்டராக இருந்தாலும் பாமக போல வருமா’..? நடிகர் விஜயை விமர்சித்த அன்புமணி..!!

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுகவுக்கு சமூக நீதி குறித்து பேச தகுதியில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சேலம் வருகை தந்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மக்களவை தேர்தலுக்கு பாமக தயாராக உள்ளது. விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம். தமிழ்நாட்டில் குறுவை சம்பா பாதிப்பு காரணமாக அரிசி விலை இன்னும் ஏற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுகவுக்கு சமூகநீதி குறித்து பேச தகுதியில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எந்த சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், முதல்வருக்குதான் மனசு இல்லை” என்றார். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அன்புமணி, ”டாக்டராக இருந்தாலும் சரி, ஆக்டராக இருந்தாலும் சரி. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால், பாமக போல சாதனைகளைச் செய்ய வேண்டும்” என்றார்.

1newsnationuser6

Next Post

#BREAKING | ”தமிழ்நாட்டில் மேலும் சில டாஸ்மாக் கடைகள் மூடல்”..!! அமைச்சர் முத்துசாமி பரபரப்பு தகவல்..!!

Sat Feb 3 , 2024
தமிழ்நாட்டில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை மதுபானங்கள், 49 நடுத்தர வகை மதுபானங்கள், 128 பிரீமியம் வகை பிராண்ட் மதுபானங்கள், 35 வகையான பீர், 13 வகையான ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இது தவிர வெளிநாட்டு மதுபானங்கள் எலைட் டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக விற்கப்படுகின்றன. இந்நிலையில், […]

You May Like