தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியபடி இருக்கிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி (26.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.37 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.44 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணாமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. மதுரை மற்றும் தேனி போன்ற நகரங்கள் முழு ஊரடங்கில் உள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் தற்ப்போது அடைக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் பயணிக்க இயலாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்ப்படும் ஏற்றம் விற்பனையாளர்களை பெரிதும் பாதிக்கிறது. பொருட்களின் உற்பத்தி தேக்கத்தை தடுக்க விலையை குறைக்கும் அவர்களுக்கு பெட்ரோல், டிசல் விலையேற்றம் உற்பத்தி விலையை அதிகரித்து விடுகிறது. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.18 லிருந்து 19 காசுகள் உயர்ந்து ரூ.83.37 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.29 லிருந்து 15 காசுகள் உயர்ந்து ரூ.77.44 காசுகளுக்கும் விற்பனையாகிறது.