ஜே.பி.நட்டா சந்திக்கப்போகும் தலைவர்கள் யார் யார்?… கூட்டணி வியூகம் குறித்து ஆலோசனை!

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணிகளை இறுதி செய்யும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, அறிக்கை தயாரிப்பு, பரப்புரை பணி என தேசிய மற்றும் மாநில கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா இன்று மாலை சென்னைக்கு வர உள்ளார்.

இன்று மாலை 5.30 மணிக்கு, சென்னை வரும் நட்டா, தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசிக்க இருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நட்சத்திர விடுதிக்கு செல்லும் அவர், பாஜக மையக்குழு நிர்வாகிகளை சந்தித்து, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் ஜே.பி.நட்டாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசித்து இறுதி செய்வது இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு வள்ளலார் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு பேச உள்ளார். முன்னதாக, துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட மின்ட் தெருவில் ஜே.பி.நட்டா சிறிது தூரம் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் நட்டா கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில், அதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே. வாசன் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், இன்று நட்டாவையும் அவர் சந்திக்க இருப்பது அரசியல் களத்தில் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

1newsnationuser3

Next Post

நோட்...! 10,11,12-ம்‌ வகுப்பு பொதுத் தேர்வு வழிகாட்டு நெறிமுறை...! இவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

Sun Feb 11 , 2024
பொதுத் தேர்வு பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதில் தனியார் பள்ளி ஆசிரியர்களை முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அதன்படி 11-ம் வகுப்பு தேர்வு மார்ச் 1-ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 4-ம் தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 26-ம் தேதியும் தொடங்கி, ஏப்ரல் […]

You May Like