’யாருப்பா நீ’..!! ’ட்விட்டருக்கு புதிய சிஇஓ-வை நியமித்தார் எலான் மஸ்க்’..!! கொந்தளிக்கும் பயனர்கள்..!!

ட்விட்டரின் புதிய சி.இ.ஓ.வை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவர் ட்விட்டரை வாங்கிய தினமே அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார். கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் நான் (எலான் மஸ்க்) தலைமை செயல் அதிகாரியாக தொடர வேண்டுமா? என்று கருத்துக் கணிப்பு நடத்தினார். இதற்கு 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

’யாருப்பா நீ’..!! ’ட்விட்டருக்கு புதிய சிஇஓ-வை நியமித்தார் எலான் மஸ்க்’..!! கொந்தளிக்கும் பயனர்கள்..!!

இதையடுத்து புதிய தலைமை செயல் அதிகாரியை தேடும் பணியில் எலான் மஸ்க் ஈடுபட்டார். அதன்படி, அவர் புதிய தலைமை செயல் அதிகாரியை (சி.இ.ஓ) அறிமுகப்படுத்தி உள்ளார். ஆனால், அது ஒரு மனிதரல்ல. எலான் மஸ்க்கின் செல்ல பிராணியான அவரது வளர்ப்பு நாய் பிளாக்கி ட்விட்டரின் புதிய சி.இ.ஓ. என மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், சி.இ.ஓ. நாற்காலியில் பிளாக்கி அமர்ந்திருக்கும் காட்சி உள்ளது. அதற்கு ட்விட்டர் நிறுவனத்தின் கருப்பு நிற டி-சர்ட் அணிந்தபடியும், அதில் சி.இ.ஓ. என்று எழுதியிருந்தது.

Chella

Next Post

பெற்றோர்களே உஷார்..!! கொசு விரட்டி திரவம்..!! பறிபோன குழந்தையின் உயிர்..!! கவனமா இருங்க..!!

Wed Feb 15 , 2023
கொசு விரட்டி திரவத்தை குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சக்ரதாரா பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளதால், அங்குள்ளவர்கள் கொசுவை விரட்டும் சுருள், மின்சாரம் முலம் இயக்கப்படும் ரசாயன திரவம், பேட்டரியில் இயங்கும் பேட் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தினேஷ் சவுத்ரி என்பவரும் தனது வீட்டில் மின்சாரத்தில் இயங்கும் ரசாயனம் திரவம் […]

You May Like