சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

கோடை வெயில் கொரானாவை கொள்ளுமா?..உலக சுகாதார அமைப்பு விளக்கம்

கோடை வெயில் கொரானா வைரசை தடுக்குமா என்பது குறித்து, உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

images 30


அதிக வெப்பநிலை இருந்தால் கொரானா பரவாது, மதுபானம் அருந்துவதால் வைரசை தடுக்கலாம், மது அருந்துவதால் அதிலுள்ள ஆல்கஹால் மூலமாக கொரானா வராமல் பாதுகாப்பாக இருக்கலாம், சுவாச பயிற்சி மேற்கொண்டால் நுரையீரல் பிரச்னை வராது கொரோனாவில் இருந்து தப்பலாம் போன்ற பல கட்டுக்கதைகள் மக்களிடையே பரவி வருகிறது. இது போன்ற பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என அரசும், வல்லுநர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

images 41

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பே பொய்யான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: சூரிய வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக இருந்தாலும் கொரானாவை தடுக்காது. வானிலை எப்படி இருந்தாலும், கொரானா தொற்றலாம். வெப்பமான வானிலை கொண்ட நாடுகளில் கூட கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, உங்கள் கைகளை அடிக்கடி மற்றும் முழுமையாக சுத்தம் செய்வதை உறுதி செய்யுங்கள். உங்கள் கண்கள், வாய் மற்றும் மூக்கைத் தொடுவதைத் தவிர்க்கவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மெத்தனால், எத்தனால் அல்லது ப்ளீச் குடிப்பதால் கொரானாவை தடுக்கவோ குணப்படுத்தவோ முடியாது. இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இவை பொருட்களின் மேற்பரப்பில் உள்ள வைரஸை சுத்தம் செய்ய பயன்படுபவை. இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள வைரஸைக் கொல்லாது, ஆனால் உள் உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். மது அருந்துவதால் கொரானா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாய் இருக்க முடியாது. அடிக்கடி அல்லது அதிகப்படியான மதுபானம் உட்கொள்வது சுகாதார பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும் என விளக்கமளித்துள்ளது.

இருமல் அல்லது அசவுகரியம் இல்லாமல் உங்கள் சுவாசத்தை 10 வினாடிகள் அல்லது அதற்கு மேல் நிறுத்த முடிந்தது எனில், கொரானா வைரஸ் அல்லது வேறு எந்த நுரையீரல் நோயிலிருந்தும் விடுபட்டுள்ளீர்கள் என அர்த்தமல்ல. நோயைப் பற்றி உறுதிப்படுத்த சிறந்த வழி ஆய்வக சோதனை மட்டுமே. இந்த சுவாச பயிற்சியால் நீங்கள் அதை உறுதிப்படுத்த முடியாது, இது ஆபத்தானது கூட. இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

1newsnationuser4

Next Post

வீட்டிலிருந்து உலகை காக்க நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு இது.. நடிகை மீனா அறிவுரை..!

Mon Apr 6 , 2020
கொரோனா குறித்து விளிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகை மீனா வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களிடம் ஊரடங்கு மற்றும் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மீனா வீடியோ ஒன்றே வெளியிட்டுள்ளார். அதில், ‘கொரோனா வைரஸ் இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்கிறது. அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பித்து […]
meena101219 2

You May Like