தேமுதிக யாருடன் கூட்டணி..? பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்..!!

மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து தங்களின் அடுத்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்கள் அறிவிப்பிலும் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதேபோல் தேமுதிகவும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஜக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அந்த கட்சி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று தேமுதிகவின் கொடிநாள் கொண்டாடப்படுவதையொட்டி, தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது தொடர்பாக அடுத்து நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்படும். எங்களுடன் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு வரும் கட்சியினருடன் ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும்” என்றார்.

1newsnationuser6

Next Post

பிப்ரவரி 22ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்..!! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!

Mon Feb 12 , 2024
இன்று தொடங்கியுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் வாசிக்க மறுத்தது, ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி தந்தது என விறுவிறுப்புடன் நடைபெற்ற இன்றைய கூட்டம் தேசிய கீதம் இசைக்கப்பட்டு முடிவடைந்தது. பின்னர், […]

You May Like