இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல யார் யாருக்கு அனுமதி அளிக்கப்படும்; ஏ.கே. விஸ்வநாதன் விளக்கம்

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விண்ணப்பிப்பவர்களில் யார் யாருக்கு அனுமதி அளிக்கப்படும், என்பது பற்றி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

viswa


144 தடை உத்தரவு செயல்பாட்டில் உள்ள நிலையில், சென்னையில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்காகவும், சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்வதற்கும் 3 முக்கியமான காரணங்களுக்காக மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.

நெருங்கிய உறவினர்கள் இறப்புக்கும், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நெருங்கிய உறவினர் திருமணத்துக்கும் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்வதற்கு மட்டும் இந்த அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. இதர தேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை.

மேலும் இந்த 3 முக்கிய காரணங்களுக்காக செல்பவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நேரில் வந்தும் விண்ணப்ப மனுக்களை கொடுக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் நேரில் கமிஷனர் அலுவலகம் வந்து காத்து கிடக்க தேவை இல்லை. அவர்களது கோரிக்கை நியாயமானது என்று தெரிந்தால், அவர்கள் நேரில் அழைக்கப்படுவார்கள்.

நேரில் அழைக்கப்படும்போது, விண்ணப்பித்தவர்கள் முதலில் தங்களது அடையாள அட்டையை காட்ட வேண்டும். அடுத்து தாங்கள் வெளி ஊர் செல்வதற்கான காரணம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

திருமணத்துக்கு செல்பவர் கள் திருமண பத்திரிகையை காட்டலாம். மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்கள், உரிய மருத்துவரின் பரிந்துரை சீட்டை காட்ட வேண்டும். இதுவரை 9 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் டி.ஜி.பி. அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது அந்த மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக்கலாம்.

வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்கள், அந்த மாநில போலீசாரிடம் அனுமதி சீட்டு பெற்று வந்தால் அனுமதிக்கப்படுவார்கள். கமிஷனர் அலுவலகத்தில், விண்ணப்பம் கொடுக்க வருபவர்கள், உரிய இடைவெளி விட்டு வரிசையில் நின்றுதான் வருகிறார்கள் இவ்வாறு ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்தார்.

1newsnationuser4

Next Post

ஆந்திரா தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள் அரசுக்கு கீழ் செயல்படும் - ஜெகன் மோகன்

Tue Mar 31 , 2020
ஆந்திராவில் தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள் அரசுக்கு கீழ் செயல்படும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. கடந்த 24ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருப்பது ஒன்றுதான் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஒரே வழி என்பதை வலியுறுத்தினார். அதனால் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்.14ம் […]
YSJaganMohanReddynew IANS 0

You May Like