உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்..

4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு கூட்டத்தில், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 முதல்வர்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 7 மாதங்களே உள்ளன. அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதால், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே சட்டமன்ற தேர்தலிலும் தொடருமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளே அதிமுகவை விமர்சித்து வருவதையும் பார்க்க முடிகிறது.

இதனிடையே அதிமுகவில் உள்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்துள்ளதால் அக்கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முதல்வர் வேட்பாளர் விவகாரம், அதிமுகவிற்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. கடந்த மாதம் இந்த பிரச்சனை கடந்த மாதம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் பலரும் முதல்வர் எடப்பாடிக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்ததால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கோபம் அடைந்தார்.

OPS

இதனிடையே கடந்த வாரம் அதிமுக அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் நேரடியாக மோதிக் கொண்டதாக தகவல் வெளியானது. அதாவது, 2017ம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவை அமைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தினார். ஆனால், முதல்வர் பழனிசாமியோ தற்போது வழிகாட்டு குழு அமைக்க தேவையில்லை எனவும், இப்போது உள்ள குழுவே போதுமானது என்று திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் ? கட்சிக்கு ஒற்றை தலைமையா..? அல்லது இரட்டை தலைமையா..? 11 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

admk meet

4 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றதாகவும் தெரிகிறது. அதாவது, அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து இன்றே முடிவெடுக்க செயற்குழுவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்தியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும் இது குறித்த விவாதம் தொடர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்த பின் முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவெடுக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று, அவரது ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர். இதனால் ஒருமித்த முடிவெடுக்க முடியாமல் கட்சி தலைமை திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

1newsnationuser1

Next Post

'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..!

Mon Sep 28 , 2020
சமீபத்த்தில் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் இறுதி சடங்கின் போது நடிகர் இளைய தளபதி விஜய் கலந்து கொண்டார். காதலுக்கு மரியாதை, லவ் டுடே , யூத், கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட விஜய் நடித்த பல படங்களில் எஸ்பிபி அவருக்காக பாடல் பாடியுள்ளார். மேலும் பிரியமானவளே போன்ற படங்களிலும் எஸ்.பி.பி அவருக்கு தந்தையாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே எஸ்.பி.பி க்கு மரியாதை செய்யும் விதமாக நேரில் வந்து எஸ்.பி.பி […]
Ei0qpYtVkAIIL

You May Like