கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது ஏன்..? மருத்துவர் சொல்லும் காரணம்..?

9-வது மாதம் முடிவில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்யப்படுவது வழக்கம். இது கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு முக்கியமான சடங்காகவும் கருதப்படுகிறது. நம் பண்டைய காலத்தில் இருந்தே இந்த சடங்குகள் நடைபெற்று வருகிறது. இது வெளிநாடுகளிலும் நடக்கும் ஒரு பாரம்பரிய சடங்காகும்.

வளைகாப்பு என்றால் என்ன ?

வளைகாப்பு என்பது கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும் ஓர் சடங்காகும். கர்ப்பிணிப் பெண்ணை பெரியவர்கள் ஒன்றுக்கூடி நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டி ஆசிர்வாதம் செய்யும் நிகழ்ச்சியாகவும் உள்ளது. மேலும், கர்ப்பிணிப்பெண்ணை கொண்டாடுவதற்காக செய்யக்கூடிய ஒரு சடங்காகவும் இது இருக்கிறது. இச்சடங்கினை சீமந்தம் என்றும் அழைக்கின்றர். முதல்முறையாகக் கருவுற்றவர்களுக்கு 5ஆம் மாதம் 7ஆம் மாதம் 9ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒரு மாதத்தில் வளைகாப்பு செய்கின்றனர்.

வளைகாப்பு செய்வதற்கான முக்கிய நோக்கம்?

முதலாவதாக இது மிகவும் முக்கியமான சடங்கு. இது குறித்து மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா கூறுகையில், ”அந்த கர்ப்பிணி பெண்ணை சந்தோஷமாக வைத்துக்கொள்வது தான் இதன் முக்கியம் நோக்கம். இது நடக்கும் நாளில் அந்த பெண்ணிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். உணவுகள், நகைகள், புடவைகள், பூ பழங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பரிசுகளுடன் இது “மகத்துவம் மற்றும் ஆடம்பரத்துடன்” நடத்தப்படுகிறது. இது அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும்.

இதில் அந்த பெண்ணிற்கு கொடுக்கக் கூடிய பலவிதமான உணவுகளை உட்கொள்ளும்போது அவர்களுக்கு அதிக சத்துக்கள் கிடைக்கும். விருந்து என்பது வரப்போகும் குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டது. இதனால் தாய் மற்றும் குழந்தைக்கு அதிக ஆற்றல் கிடைக்கும். அந்த நேரத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அனைத்து வகையான சத்தங்களும் கேட்கும். வளைகாப்பு செய்யும் நேரத்தில் அதிக வளையல்களை அணிவிக்கும்போது, அந்த தாயினுடைய கையில் இருக்கும் வலையோசையை கேட்கும்போது அந்த குழந்தைக்கு அது இனிமையான மகிழ்ச்சியை அளிக்கும்.

முன்பெல்லாம் பெண்ணுக்கு அதிகளவில் வளையல் அணிவிப்பார்கள். ஏனென்றால், அந்த பெண் எங்கு பயணிக்கிறார் அல்லது எங்கு செல்கிறார் என்பதை வளையோசையின் உதவியுடன் தெரிந்து கொள்ள முடியும். மேலும், எங்கள் வீட்டிற்கு குழந்தை வரப்போகிறது என்பதை அனைத்து உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் விடுக்கப்படும் அறிவிப்பாகவும் இந்நிகழ்ச்சி இருக்கிறது. இது போன்ற விழாக்கள் உலகில் பிற பகுதிகளிலும் நடத்தப்படுகின்றன” என்று கூறினார்.

Read More : கொட்டிக் கிடக்கும் வேலை..!! லட்சங்களில் மாத சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Chella

Next Post

WOW!… Ola, Uberக்கு போட்டியாக!… விரைவில் Paytm ஆட்டோ சவாரி!

Fri May 10 , 2024
Paytm: Ola, Uberக்கு போட்டியாக விரைவில் Paytm ஆட்டோ சவாரி வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான சோதனை நடைபெற்று வருகிறது. ஃபின்டெக் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Paytm, புதிய துறையில் நுழைய தயாராகி வருகிறது. Paytm இன் இந்த தயாரிப்பின் காரணமாக, Ola மற்றும் Uber போன்ற ரைட் ஹெயிலிங் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வரும் நாட்களில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். Paytm ஆட்டோ ரிக்‌ஷாக்களுடன் ரைடு ஹெயிலிங் சேவைகளின் […]

You May Like