நாய், பூனைகளுக்கும் கோவிட் -19 தடுப்பூசி தேவை – விஞ்ஞானிகள் குழு 'அம்மா அந்த இடத்தில வலிக்குது' கதறிய சிறுவன்..! விசாரணையில் சிக்கிய 4 சிறுவர்கள்..! பிப்ரவரி 1 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுவது உண்மையா..? PIB வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்..! நம்ம இமான் அண்ணாச்சி காதல் திருமணமாம்..! அதுவும் யாரை தெரியுமா..? வெளியான சுவாரஸ்ய இரகசியம்..! முன்னணி ஆபாச தளத்திலிருந்து 2 மில்லியன் பயனர்களின் தரவுகள் திருட்டு.. ஹேக்கர்களிடம் விற்கப்படுவதாகவும் தகவல்.. 1950 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் குடியரசு தின கொண்டாட்டம்..! பெருமிதமான வரலாற்று புகைப்படங்கள் ஒரு பார்வை..! அதிர்ச்சி.. டேட்டிங் வலைதளத்தின் 2.28 மில்லியன் பயனர்கள் தரவுகள் கசிவு..! மொபைல் நம்பர், இருப்பிடம் அனைத்தும்.. தமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. எப்போது முதல் தெரியுமா..? இனிமே உங்க ஸ்மார்ட்போனிலேயே வோட்டர் ஐடியை டவுன்லோடு செய்யலாம்.. இதுதான் எளியவழி.. மக்களே எச்சரிக்கை..! கோவிட் -19 தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் என்ன தண்டனை தெரியுமா..? கனவு கண்டு '342 கோடி' வென்ற அதிஷ்டம்..! "20 வருடமா இதை தான் செய்கிறேன்" பெண் பெருமிதம்..! மக்களே.. IFSC மற்றும் MICR குறியீடுகளை மாற்றவுள்ள பிரபல வங்கி..! மார்ச் மாதத்திற்கு பின் பழைய குறியீடு இயங்காது..! எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன்..! சாலமன் பாப்பையா, பாடகி சித்ரா உள்ளிடோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்.. பழைய ரூபாய் நோட்டுகள் குறித்து தீயாய் பரவும் செய்தி..! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்..! இந்தியாவில் யாருக்கெல்லாம் Z +, Z, Y மற்றும் X வகை பாதுகாப்பு வழங்கப்படுகிறது..? காரணம் என்ன..?

“சீனா ஏன் பிரதமர் மோடியை பாராட்டுகிறது..?” லடாக் மோதல் குறித்து ராகுல்காந்தி கேள்வி..

பிரதமர் மோடியை ஏன் சீனா பாராட்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியை

லடாக்கில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து தொடர்ந்து தனது கருத்துகளை பதிவு செய்து வரும் ராகுல்காந்தி இன்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவின் க்ளோபல் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள அவர் “ சீனா நமது வீரர்களை கொன்றது. சீனா நமது நிலத்தை பறித்து விட்டது. இந்த மோதல் நேரத்தில், ஏன் பிரதமர் மோடியை சீனா பாராட்டுகிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

லடாக் விவகாரம் குறித்து நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய மோடி, இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை என்றும், இந்திய நிலைகளை யாரும் கைப்பற்றவில்லை என்றும் தெரிவித்தார். மோடியின் இந்த கருத்து குறித்து காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பிய நிலையில், பிரதமரின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனவும், அது ராணுவ வீரர்களின் மன உறுதியை குறைக்கும் முயற்சி என்றும் பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்தது.

இதனையடுத்து, நேற்று சீனாவின் க்ளோபல் டைம்ஸ் நாளிதழ் “ சீனாவுடன் போரிட முடியாது என்று இந்தியாவிற்கு தெரியும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில், எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்க, பிரதமர் வார்த்தையில் விளையாடுகிறார் என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் மோடியின் கருத்தை வரவேற்பதாக கூறிய அந்நாளிதழ், இருநாடுகளின் பிரச்சனையை தீர்க்க இது உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது. மேலும் “இராணுவத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல், சர்வதேச செல்வாக்கிலும் சீனாவின் திறன் இந்தியாவை விட உயர்ந்தது.

global times

“இந்தியப் படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்ற பிரதமர் மோடியின் கூற்று, இந்திய மக்களை திருப்திப்படுத்தவும், இந்திய வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கவும் கூறப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது” என்று அந்நாளிதழ் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது.

1newsnationuser1

Next Post

“A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு?” உடுமலை சங்கர் வழக்கு குறித்து கமல் கேள்வி..

Mon Jun 22 , 2020
தமிழகத்தையே உலுக்கிய கொலையில், A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்த கவுசல்யாவும் காதலித்து 2015 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்திற்கு கவுசல்யாவின் குடும்பத்தினர் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் […]
தேர்தல் பணியை தொடங்கிய பிக்பாஸ்..! 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி..!

You May Like