மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனா வைரஸ் வயதானவர்களை மட்டும் அதிகமாக தாக்குவது ஏன்..? உலகம் முழுவதும் வேகமாக பரவியது எப்படி..?

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் வயதானவர்களை மட்டும் அதிகமாக தாக்குவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

corona

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் 92,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், யாரெல்லாம் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்..? எப்படி பாதிக்கும் என்பது போன்ற பல தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் மத்தியில், சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் உஹான் நகரில் தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற காலம் என்பதால், உலகம் முழுவதும் இருந்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்டதால் இந்த நோய் தொற்று மற்ற நாடுகளுக்கும் பரவியது. கொரோனாவின் தாக்கத்தை சீனா தாமதமாகவே உணர்ந்தது என்றே சொல்ல வேண்டும். அதன் ஆபத்தை உணர்வதற்குள்ளேயே வேகமாக பரவியது கொரோனா.

corona virus india

இதனால் சீனாவில் மட்டும் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர், 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமின்றி, இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. இதனால் உலகம் முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

எனினும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருத்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற சாதாரண அறிகுறிகள் கொரோனா பாதித்தவர்களிடம் தென்படும். ஒருவரை 14 நாட்கள் தனிமையில் வைத்து பரிசோதித்தால் மட்டுமே அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவரும். அதன்பிறகு 2 அல்லது 3 முறை வைரஸ் பரிசோதனை செய்தால் மட்டுமே பாதிப்பு இருக்கிறதா என்பது தெரியவரும். இன்னும் ஒரு சிலருக்கோ 28 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகே பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மற்ற வைரஸ் தொற்றுகளை போல அல்லாமல், கொரோனா வைரஸ் மூச்சுக் காற்று மூலம் பரவுவதால், இது அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் ஆகியவற்றில் இருந்து எளிதாக மற்றவர்களுக்கு பரவுகிறது. கொரோனாவால் இதுவரை இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை பார்த்ததில், இந்த வைரஸ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகமாக தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

corona

அதே போல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், இதய பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்களையும் கொரோனா எளிதாக தாக்குகிறது. குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு கொரோனோ பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கொரோனாவல் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், மோசமான பாதிப்பு ஏற்படவில்லெ என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

1newsnationuser1

Next Post

தமிழகம் முழுவதும் சிஏஏக்கு எதிரான போராட்டக்காரர்களை கைது செய்து அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Thu Mar 5 , 2020
தமிழகம் முழுவதும் சிஏஏக்கு எதிராக போராட்டக்காரர்களை அங்கிருந்து கைது செய்து அப்புறப்படுத்த தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. திருப்பூரில் போக்குவரத்திற்கு இடையுறாக குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெறுவதாக வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அனுமதியின்றி சிஏஏக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதால் பொது […]
caa protest trichy

You May Like