’என்னடா தண்டவாளத்தையே தூக்கிட்டீங்க’..!! 2 கி.மீ. தூரம் வரையிலான ரயில் பாதை திருட்டு..!! பரபர சம்பவம்

பீகார் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கும்பல், ரயில் இன்ஜினை திருடி பல பாகங்களாக பிரித்து காயலான் கடையில் விற்றனர். இந்நிலையில், அங்கு தற்போது ரயில்வே தண்டவாளங்களும் திருடுபோயுள்ளது. சமஸ்டிபூர் ரயில்வே கோட்டத்தில் பந்தவூல் என்ற ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து லோஹாத் என்ற சர்க்கரை ஆலைக்கு ரயில்வே பாதை ஒன்று உள்ளது. இந்த ஆலை சில ஆண்டுகளாக இயங்கவில்லை. எனவே, இந்த ரயில் பாதையில் போக்குவரத்து ஏதும் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில், சுமார் 2 கி.மீ தூரம் கொண்ட இந்த ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை ஒரு மர்ம கும்பல் திருடி விற்றுள்ளது. இந்த விஷயமானது கடந்த ஜனவரி 24ஆம் தேதிதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

’என்னடா தண்டவாளத்தையே தூக்கிட்டீங்க’..!! 2 கிமீ தூரம் வரையிலான ரயில் பாதை திருட்டு..!! பரபர சம்பவம்

இதனைக் கேட்ட ரயில்வே நிரவாகம் இரு ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவத்தில் ரயில்வே ஊழியர்களும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னர் ஜனவரி 19ஆம் தேதி, பீகார் தலைநகர் பாட்னாவில் செல்போன் டவரை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மீன் கிட்ட12000 வாடகை வாங்கிய வீட்டு உரிமையாளர்! அநியாயமா இருக்கே!

Mon Feb 6 , 2023
அமெரிக்காவைச் சார்ந்த  டிக் டாக் புகழ் நிக் வருடத்திற்கு பன்னிரண்டாயிரம்  ரூபாய்  மீன் வளர்க்க வாடகை தருவதாக கூறி வெளியிட்ட வீடியோ இன்டர்நெட்டில் வைரலாக இருக்கிறது. அமெரிக்காவில் டிக் டாக் வீடியோக்களின் மூலம் புகழ்பெற்றவர் நிக். இவர் சமீபத்தில் வெளியிட்ட டிக் டாக் வீடியோ ஒன்றில் தான் மாதம் ஒன்றுக்கே  200 அமெரிக்க டாலர்களை வீட்டில் மீன் வளர்க்க வாடகையாக கொடுத்து வருவதாகவும் மேலும்  மாதம் 15 டாலர்களை வளர்ப்பு […]

You May Like