பிரச்சினைகளுக்கு காரணமான தர்மரை கட்சியில் இருந்து ஏன் இன்னும் நீக்கவில்லை? அதிமுகவில் பரபரப்பு…!

அதிமுகவில், மாநிலங்களவை எம்பி சீட் சிவி சண்முகம் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இரண்டு பேருக்கும் தான் என்று எடப்பாடி தரப்பு முடிவு செய்திருந்த நிலையில்,  ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளரான தர்மருக்கு அந்த சீட் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால் தான் ஜெயக்குமார் மற்றும் சி.வி சண்முகம் இருவரும் ஒற்றை தலைமை என்கிற வாதத்தை தீவிரமாக முன் எடுத்துச் சென்றுள்ளனர். அந்த நிலையில் தான், ஓ.பன்னீர் செல்வத்திடம் எம்பி சீட் கேட்டு சென்ற கட்சியின் கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களுக்கு அந்த வாய்ப்பை தராமல் கட்சியின் ஜூனியர் தர்மருக்கு கொடுத்ததால் அவர்களும் அதிர்ச்சியில் எடப்பாடி பக்கம் சென்று விட்டனர். 

ஒற்றை தலைம விவகாரம் நெடுநாட்களாக இருந்து வந்த பிரச்சினை என்றாலும் இந்த அளவுக்கு உச்சத்திற்கு செல்ல இந்த தர்மர்தான் காரணம் என்கின்றனர். ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் இருந்து அவருக்கு பக்க பலமாக இருந்து வருகிறார் தர்மர். எனவே தனது ஆதரவாளருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் அந்த எம்பி சீட்டை போராடி வாங்கி கொடுத்தார் ஓ.பன்னீர் செல்வம்.  ஆனால் அதுதான் அவரின் இன்றைய நிலைக்கு காரணமாக அமைந்து விட்டது.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அதே மேடையிலேயே ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவர் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் , ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கினார்.  இதைத்தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் உட்பட அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்பியையும் நீக்கியதற்கு ஓ.பன்னீர்செல்வம் மிகவும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் ஓ.பி.எஸ் ஆதரவாளர் தர்மரை எடப்பாடி பழனிச்சாமி இன்னும் கட்சியை விட்டு நீக்காதது மேலும் சலசலப்பை எழுப்பி உள்ளது. அதிமுக வட்டாரத்தில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கிய நிலையில் தர்மர் மட்டும் இன்னமும் நீக்கப்படவில்லை.

ஒருவேளை அவர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவி விட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது .  பொதுக்குழுவுக்கு முன்பாகவே தர்மரை தங்கள் பக்கம் இழுத்து விட பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை அதிமுகவிலிருந்து நீக்காததால் அவர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சாய்ந்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.   ஓ.பி.எஸ் பக்கம் நின்ற பலரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சென்று விட்டனர். ஆனால் அதிமுகவில் இப்போது நடந்து வரும் அத்தனை பிரச்சனைக்கும் காரணமான தர்மர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சென்று விட்டதால் தான் அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லையா? என்று அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Baskar

Next Post

“ வழக்கறிஞர்கள் ரூ.10 முதல் 15 லட்சம் வசூலித்தால், சாமானியர்கள் எப்படி கொடுப்பார்கள்..” சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு

Sat Jul 16 , 2022
பிரபல வழக்கறிஞர்களால் விதிக்கப்படும் அதிகப்படியான சட்டக் கட்டணங்கள் குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கவலை தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் 18வது அகில இந்திய சட்ட சேவைகள் அதிகாரிகளின் கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “வளமான மக்கள் பெரிய வழக்கறிஞர்களை வாங்க முடியும். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர்கள் உள்ளனர், அவர்களின் கட்டணத்தை சாமானியரால் செலுத்த முடியாது. ஒரு விசாரணைக்கு 10-15 […]

You May Like