வழக்கம் போல் இன்றும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறியுள்ளது. இன்றைய நிலவரப்படி (25.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.18 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.29 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்று 40 டாலர் என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யும் நிலையிலும் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடும் ஏற்றம் ஏற்றப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் எண்ணெய் நிறுவனத்திடம் அதிகாரம் கொடுக்கப்பட்ட பிறகே இரு மாதங்களுக்கு ஒரு முறை விலை மாறிக்கொண்டிருந்தது தற்போது தினந்தோறும் மாறும் சூழலை சந்தித்துள்ளது.
கொரோனாவால் ஏற்ப்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய முயலுவதாக கூறும் மத்திய அரசு ஏன் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தலையீடு செய்யவில்லை என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது.
இன்று சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.04 லிருந்து 14 காசுகள் உயர்ந்து ரூ.83.18 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.17 லிருந்து 12 காசுகள் உயர்ந்து ரூ.77.29 காசுகளுக்கும் விற்பனையாகிறது.