பிரதமர் ஏன் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே இந்திய – சீன எல்லையான லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங் ஏரிப்பகுதி ஆகிய எல்லைப்பகுதிகளில் இந்திய, சீன படைகள் குவிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில், அதை தணிக்க இருதரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து கால்வான் பள்ளத்தாக்கு எல்லையில் இருதரப்பு படைகளும் அமைத்திருந்த தற்காலிக தங்குமிடங்களை நேற்று முன் தினம் மாலை அகற்றும் பணி நடந்ததாக கூறப்படுகிறது.
அப்போது இருநாட்டு வீரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில், மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. உயிரிழந்த இந்திய வீரர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுப்படுகிறது. அதே போன்று சீன தரப்பில் 43 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ பிரதமர் ஏன் மௌனமாக இருக்கிறார்..? ஏன் அவர் ஒளிந்திருக்கிறார்..? நடந்தவரையில் போதும்.. என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரிய வேண்டும். எங்கள் வீரர்களை கொல்ல சீனாவிற்கு எவ்வளவு தைரியம்..? எங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க, அவர்களுக்கு எவ்வளவு துணிச்சல்..?” என்று குறிப்பிட்டுள்ளார்.