மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

அறிகுறிகள் இருந்தாலே தனிமைப்படுத்திக் கொள்ளும் மற்ற மாநில முதல்வர்கள்.. ஆனால் தமிழக முதல்வர்..? என்ன நடக்கிறது முதல்வர் அலுவலகத்தில்..?

கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தால் அவர்கள் கட்டாயம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு கூறிவரும் நிலையில், முதல்வர் பழனிசாமி ஏன் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்று கேள்வி எழுகிறது.

 தமிழக முதல்வர்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிதீவிரமாக பரவியதன் விளைவு தற்போது இந்தியா உலகளவில் 3-வது இடத்தில் உள்ளது. இதுவரை நாட்டில் மொத்தம் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையோ 22,000-ஐ தாண்டியுள்ளது. கொரோனாவை எதிர்த்து போராடும் முன்கள வீரர்களான மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், அரசு உயரதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என பாரபட்சமின்றி அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாவதை தொடர்ந்து பார்க்க முடிகிறது.

அந்த வகையில் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர் அலுவக பணியாளர்களுக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால், அல்லது லேசான அறிகுறிகள் தென்பட்டாலோ சம்மந்தப்பட்ட முதல்வர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்தி கொள்வதுடன், வீட்டில் இருந்த தங்கள் அலுவலகப் பணிகளை மேற்கொள்வதாகவும் அறிவிக்கின்றனர்.

தமிழகத்தில்

உதாரணமாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டவுடன், தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அதன்பிறகு அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று முடிவு வந்தது.

கர்நாடக முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அம்மாநில முதல்வர் எடியூரப்பா தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மேலும் வீட்டில் இருந்தே பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளார். இதேபோல் புதுச்சேரி முதல்வர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், முதல்வர் அலுவலகம் மூடப்பட்டது.

பெங்களூருவில்

ஆனால் தமிழகத்தில் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு உறுதியாகி வந்தாலும் கூட முதல்வர் அதனைப் பொருட்படுத்தாமல் தனது பணிகளை தொடர்ந்து வருகிறார். இதனால் கொரோனாவின் தீவிரத்தை முதல்வரே உணர்ந்துகொள்ள வில்லையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

ஆம்.. முதலில் முதல்வர் அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த ஒரு பெண்ணிற்கு கொரோனா கண்டறியப்பட்டது. பின்னர் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து முதல்வரின் தனிச் செயலாளருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டது. அவரின் அறையில் தான் முதல்வரின் செயலாளர்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த தனிச் செயலரின் திடீர் மரணம் மொத்த அலுவலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பின்னர் முதல்வர் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அனைவரும் தொற்று இல்லை என்ற முடிவு வந்தது. அலுவலகம் முழுவது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. முதல்வரை சந்திக்க வரும் அமைச்சர்கள், அதிகாரிகள், பார்வையாளர்கள் என அனைவருக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

TN secretariat

இந்நிலையில் தான் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கடந்த 8-ம் தேதி கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அதற்கு முந்தைய நாளான 7-ம் தேதி தான், அமைச்சர் தங்கமணி முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தனது துறையின் சார்பில் ரூ. 5 கோடிக்கான காசோலையை வழங்கியிருந்தார். மேலும் முதல்வருடன் அமைச்சர் சுமார் 20 நிமிடங்கள் வரை ஆலோசனையும் நடத்தியுள்ளார்.

கொங்கு மண்டலத்தில் முதல்வரின் செல்வாக்கை சரியாமல் பார்த்துக் கொள்வதிலும் சரி, முதல்வர் எந்தவொரு முக்கிய முடிவை எடுக்கும் முன்னரும் அவருக்கு ஆலோசனை வழங்குவதிலும் சரி எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் தங்கமணி. எனவே தான் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி என்ற தகவலை கேட்டதும் முதல்வர் மிகவும் அப்செட் ஆனதாகவும் கூறப்படுகிறது.

AIADMKMinisterThangamani750

ஆனாலும் இதையெல்லாம் முதல்வர் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. முதல்வரின் உடல்நிலையை பரிசோதிக்கும் மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்கள் என அவருக்கு நெருக்காமனவர்கள் அனைவருமே, “உடனடியாக நீங்க தனிமைப்படுத்திக்கோங்க.. வீட்டில் இருந்தே அன்றாட பணிகளை செய்யுங்க..” என்று அறிவுரை கூறு வருகின்றனராம். ஆனால் முதல்வரோ அதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை..

தன்னிடம் அறிவுரை கூறுபவர்களிடம் முதல்வர் பழனிசாமி, தனக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி எதுவும் இல்லாததால் கவலைப்பட தேவை இல்லை என்று கூறுகிறாராம். மேலும் பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு எப்படி யாரையும் பார்க்காமல் இருக்கிறது..? என்றும் கேள்வி எழுப்புகிறாராம்..

Edappadi

ஆனாலும் பழனிசாமியின் உடல்நிலை தினமும் பரிசோதனை செய்யப்படுகிறது என்றும், வாரம் ஒருமுறை அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக அவருக்கு நடைபெற்ற சோதனையில் கூட நெகட்டிவ் என்ற முடிவு தான் வந்துள்ளது. எனினும் கொரோனா தொற்று உறுதியானர்களை முதல்வர் சந்தித்துள்ளதால், அவர் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் வலியுறுத்தி வருகின்றனர். முதல்வரோ ‘மக்கள் பணியில் ஈடுப்பட்டுள்ளேன், அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார்’ என்று கூறி வருகிறாராம்…

கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தால் அவர்கள் கட்டாயம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு ஒருபுறம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய முதல்வரே அதனை பொருட்படுத்தாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser1

Next Post

திருமணம் ஆகி 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்....

Mon Jul 13 , 2020
திருப்பூரில் திருமணம் ஆகி நான்கு நாட்களே ஆன புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த செல்வராஜ் (29) என்பவருக்கும் திருப்பூரை சேர்ந்த தேவி (20) என்பவருக்கும் கடந்த 8ம் தேதி பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் கணியூரில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் புதுமண தம்பதிகள் விருந்துக்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தாராபுரம் மாருதி நகரில் உள்ள அவர்களது உறவிறனர் […]
suicide 600 1518436071 1519041121 1

You May Like