ஒரே செலவில் இரட்டிப்பு லாபம்..! மஞ்சள் தோட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி..! 3 நிமிடத்தில் கொரோனாவை கொல்லக்கூடிய மாஸ்க்.. இதன் விலை எவ்ளோ தெரியுமா? சர்ஜிக்கல் தாக்குதலைப் போல, சீனாவிலும் தாக்குதல்..! இந்திய ராணுவ பலத்தை பார்த்து அலறிய சீன ராணுவ ஜெனரல்..! 2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை..! இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்..! மீண்டும் பெரியாரை சீண்டிய காவி!!! திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்..! நிச்சயம் திருப்பி அடிக்கும்..! முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி..! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்..! 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்..? கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு..! ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு..! கட்சித் தலைமை நடவடிக்கை..! 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா..? இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்..! கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு!

மணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்…

திருச்சி மாவட்ட டிஐஜி பாலகிருஷ்ணன் பணி மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து காவிரி ஆறு பாதுக்காப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

V. Balakrishnan IPS

கடந்த ஒரு வருடங்களாக திருச்சி மாவட்ட டிஐஜியாக இருப்பவர் பாலகிருஷ்ணன். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உண்டு. தொடர்ந்து தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்கள் மனதை ஈர்த்தவர். இவர் பதவிக்கு வந்த பிறகு மக்கள் நேரடியாகவே இவரிடம் புகார் அளிக்கும் வகையில் எளிமையாக பழக கூடியவர். ஆன்லைன் வீடியோ கான்பரன்ஸ் மூலமும் வரும் புகார்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுத்தவர்.

மேலும் காவிரி டெல்டா பகுதியில் அதிகரித்து வந்த மணல் கொள்ளை இவர் பணிக்கு வந்த பின் கட்டுக்குள் வந்தது. மணல் கொள்ளை சம்பத்தமாக வரும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்ததுடன் அவர்களை கைது செய்யும் படி உத்தரவிடுவார். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தான் தற்போது இவரது பணி மாற்றத்திற்கு காரணம் என குற்றசாட்டு எழுந்துள்ளது.

download 2

சில நாட்களுக்கு முன் நடந்த பணி மாற்றத்தில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதால் இது வழக்கமான பணி மாற்றம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பணி காலம் ஒரு வருடங்கள் தான் ஆகியுள்ள நிலையில் இவர் பெயர் பட்டியலில் சேர்ந்துள்ளது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. இந்த பணி மாற்றத்திற்கு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பணி மாற்றத்தை உடனே திரும்ப பெறவில்லை என்றால் அனைத்து சமூக நல அமைப்புகளுடன் சேர்ந்து தீவிர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த டிஐஜி பாலகிருஷ்ணன் தான் 2012ல் மதுரையில் எஸ்பி யாக பணியாற்றிய போது திரு. சாகயம் அவர்களால் வெளிக்கொண்டு வரப்பட்ட கிரனைட் முறைகேடு வழக்கில் மாவட்ட ஆட்சி தலைவர் மிஸ்ராவுடன் சேர்ந்து ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி மதிப்பிலான கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மெரீனா புரட்சியிலும் போராட்டகாரர்களை தடியடி நடத்தி கலைக்க உத்தரவு கொடுக்கப்பட்ட போது நியாமாக போராடும் தமிழ் மக்களை அடிக்க மாட்டேன் என உறுதியாக நிற்றவரும் இவரே. இருப்பினும் இவரை விலக்கிவிட்டு வேறு காவலர்கள் உதவியுடன் அந்த தடியடி நடைபெற்றது. இது போன்ற அவரது நேர்மையான செயல்களால் கறைபடியாத கலங்கரை விளக்கமாக காவல்துறையில் இருந்து வருகிறார் பாலகிருஷ்ணன்.

1newsnationuser5

Next Post

ரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு!

Fri Jul 3 , 2020
சென்னை மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அரசு பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் தமிழக அரசு மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இயக்குனர் பதவிக்கான காலி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 62 வயது நிரம்பியவர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் விண்ணபிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு. ரூ.75,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியுடையோர் / விருப்பமுள்ளோர் https://tnrd.gov.in/ […]
Tamil Nadu TN Government Jobs

You May Like