’தனி ரூம் கேட்ட மனைவி’..!! ’அந்தரங்க ஃபோட்டோக்களை பேஸ்புக்கில் போஸ்ட் பண்ண கணவன்’..!! பகீர் சம்பவம்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பின் கணவர் வீட்டுக்குச் சென்ற பெண், அங்கு தானும் கணவரும் தனியாக வசிக்க மொட்டை மாடியில் தனி அறை கட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதற்கு கணவரும் அவரது குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கோபமடைந்த அந்தப் பெண், தனது பெற்றோருடன் வசிக்க ஆரம்பித்துள்ளார். அதே சமயம், அவரது கணவர் வெளிநாட்டில் வேலை கிடைத்துச் சென்றுவிட்டார்.

வெளிநாட்டுக்குச் சென்ற கணவர் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து மனைவியின் பெயரில் போலியான ஃபேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதில் மனைவியின் நிர்வாண படங்களைப் பதிவிட்டு வந்துள்ளார். இதனை அறிந்த அந்தப் பெண், சைபர் க்ரைம் பிரிவு போலீசில் 8 மாதங்களுக்கு முன்பே புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகரை நேரில் சந்தித்து புதிய புகார் மனுவை அளித்துள்ளார். தன் கணவர் மற்றும் அவரது நண்பரை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து கைது செய்ய வேண்டும் என அந்தப் பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

Chella

Next Post

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை..!! கூகுள் மேப் உதவியுடன் சுங்கச்சாவடியை கடக்காமல் தப்பிய கொள்ளையர்கள்..!!

Thu Feb 16 , 2023
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் கூகுள் மேப்பை பயன்படுத்தி சுங்கச் சாவடியை கடக்காமல் தப்பித்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலையில் கடந்த 12ஆம் தேதி எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர். இதேபோன்று தேனிமலை மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம்மையங்களில் இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும், கலசபாக்கம் பகுதியில் […]
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை..!! கூகுள் மேப் உதவியுடன் சுங்கச்சாவடியை கடக்காமல் தப்பிய கொள்ளையர்கள்..!!

You May Like