
கோவை: கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை, அவரது பெற்றோர்கள் கூலிப்படை உதவியோடு தாக்குதலில் ஈடுபட்டு கடத்தி சென்றுவிட்டதாக பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவைமாவட்டம் இடையர்பாளையம் வித்யா காலனியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சக்தி தமிழினி பிரபா என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கார்த்திக்கேயன் வீடு வசதியில்லாத குடும்பம் என்பதாலும், மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் வீட்டார் காதலுக்கு மறுப்பு தெரிவித்துவந்துள்ளனர்.

ஆனால் கார்த்திக்கேயன் – தமிழினி பிரபா ஆகிய இருவரும் கடந்த 5 ஆம் தேதி கோவையில் வைத்து சுய மரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து தகவலறிந்த பெண்ணின் தாய், தந்தை மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் வீடு புகுந்து என்னையும், எனது தாயையும் தாக்கி மனைவியை கடத்தி சென்றுவிட்டனர். எனவே அவர்களிடமிருந்து எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என துடியலூர் காவல்நிலையத்தில் கார்த்திக்கேயன் புகார் அளித்துள்ளார்.