ராஜபாளையத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் முயல்,காட்டு பன்றிகளை வேட்டையாடி டிக்டாக் பதிவிட்டு வந்ததால் கைது செயய்பப்பட்டுள்ளார்.

ராஜபாளையம் வடகரை குடல்பூரி நத்தத்தை சேர்ந்தவர் சிவா (19) இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் படித்துவருகிறார். இவர் இரவில் தனது நாயுடன் அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள முயல்,காட்டு பன்றி போன்ற விலங்குகளை வேட்டையாடி, அதனை சினிமா வசனங்களுடன் பதிவிட்டு வந்துள்ளார். தகவல் அறிந்த வனத்துறை அதிகாரி சுப்பிரமணியன், பயிற்சி அலுவலர் ரவிபெருமாள் குழுவினர், சிவாவை கைது செய்துள்ளனர்.
டிக்டாக் மோகத்தால் தொடர்ந்து பலர் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் செய்யவது சட்டப்படி குற்றமாக இருப்பினும் தைரியமாக சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். கவர்ச்சியான உடை, வன்முறை வசனங்கள், இரட்டை அர்த்த வார்த்தைகள் என எல்லை மீறிக்கொண்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.