சூரிய கிரகணத்தின் போது சமைத்த உணவு கெட்டுப்போகுமா? கர்ப்பிணிகள் பார்க்கலாமா? உண்மை என்ன?

சூரிய கிரகணத்தின் போது சாப்பிடலாமா? கர்ப்பிணிகள் பார்க்கலாமா? என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்…

கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாமா? அந்த நேரத்தில் வெளியே வரலாமா? சாப்பிடலாமா? என்பது தான் சாதாரண மக்களின் பொதுவான கேள்வியாக இருக்கிறது. அந்த காலத்தில் சூரிய கண்ணாடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தால் அரியாத பாமர மக்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கி வைத்திருந்தனர். ஆனால், இப்போது அந்த பயம் தேவையில்லை. ஏனென்றால் நம்மை வழிகாட்டவும், மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும் அறிவியல் ஆயுதம் இருக்கிறது. அறிவியலைப் பின்பற்றினால் சூரியனையே ஆய்வு செய்யலாம் என்ற நிலைக்கு நாம் முன்னேறி இருக்கிறோம். இந்நிலையில், இன்று நிகழும் சூரிய கிரகணத்தின் போது சாப்பிடலாமா? எப்படி சூரிய கிரகணத்தைப் பார்ப்பது என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்…

சூரிய கிரகணத்தின் போது சமைத்த உணவு கெட்டுப்போகுமா? கர்ப்பிணிகள் பார்க்கலாமா? உண்மை என்ன?

கிரகணத்தின் போது சூரிய கதிர்கள் பட்டு, அனைத்து உணவும் விஷமாக மாறிவிடும் என்றும் அதனால் சூரிய கிரகணத்தின் போதோ, அதற்கு முன்போ தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடக் கூடாது என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். கிரகண காலத்தில் உணவு விஷமாகிவிடுமா? கெட்டுப்போய் விடுமா என்பது தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாளில் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின் போது நடத்தப்பட்ட ஆய்வில், கிரகணத்தின் போது சமைத்த உணவுகள் கெட்டுப்போகவில்லை என்பதும் விஷமாகிவிடவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. ஆய்வின் முடிவுகள் ஜேனல் ஆப் இகோ மைக்ரோபயாலஜி என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டன.

சூரிய கிரகணத்தின் போது சமைத்த உணவு கெட்டுப்போகுமா? கர்ப்பிணிகள் பார்க்கலாமா? உண்மை என்ன?

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் நிகழ்வு தான் சூரிய கிரகணம். அப்போது சூரியனை சந்திரன் மறைத்துக் கொண்டிருக்கும். அரிய நிகழ்வான சூரிய கிரகணத்தை நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. ஏனென்றால், சூரியனின் ஒளியால் நம் கண்கள் நிரந்தரமாகக் கூட பாதிக்கப்படலாம். சூரிய கிரகணத்தை காண்பதற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ள சூரியகதிர் கண்ணாடி (Solar Filter) களைப் பயன்படுத்தி பார்க்கலாம். சூரியகதிர் கண்ணாடிகள் சூரிய ஒளியின் அளவை மட்டுமின்றி, புற ஊதாக் கதிர்களையும் வடிகட்டி பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. தரமான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த கண்ணாடிகளைக் கொண்டு எளிய முறையில் சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம்.

சூரிய கிரகணத்தின் போது சமைத்த உணவு கெட்டுப்போகுமா? கர்ப்பிணிகள் பார்க்கலாமா? உண்மை என்ன?

கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தான் அதிக கட்டுப்பாடுகள் வீட்டில் இருக்கும். கிரகணத்தின் போது வரும் கதிர்கள் கர்ப்பிணியையும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஊறு விளைவிக்கும் என்ற நம்பிக்கையே அதற்கு காரணம். இது நம் நாட்டில் மட்டுமில்லை, உலகின் பல்வேறு நாடுகளிலும் கட்டுப்பாடுகள் உள்ளன. அவர்கள் கிரகணத்தைப் பார்க்கலாமா என்பது பற்றியும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். மற்ற நாட்களைப் போலவே கிரகணத்தின் போது, கர்ப்பிணிப் பெண்கள் நடமாடலாம், சாப்பிடலாம் என்றும் அதனால் எந்த பாதிப்பும் வராது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சூரிய கிரகணத்தை கர்ப்பிணி பெண்கள் பார்க்க விரும்பினால் மற்றவர்களுக்கு உள்ளதைப் போலவே, சூரியகதிர் கண்ணாடி (Solar Filter) களைப் பயன்படுத்தி பார்க்கலாம். இந்த முன்னெச்சரிக்கையுடன் கிரகணத்தைப் பார்க்கும் போது எந்த புதிய கதிர்வீச்சும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன் உரிய உபகரணங்கள் இன்றி அதாவது சூரிய ஒளிக் கண்ணாடி இன்றி, சூரிய கிரகணத்தைப் பார்ப்பதைத் தவிர்த்திடுமாறும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Chella

Next Post

’என்ன மாதிரி அப்பாவியும் கிடையாது’..!! ’என்ன மாதிரி கெட்டவளும் யாரும் இருக்க முடியாது’..!! ஜனனியின் டெரர் முகம்..!!

Tue Oct 25 , 2022
இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் ப்ரோமோவில், என்ன மாதிரி அப்பாவியும் கிடையாது.. என்ன மாதிரி கெட்டவளும் இந்த உலகத்தில இருக்க முடியாது” என போட்டியாளர் ஜனனி பேசியுள்ளார்.  தீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்து பழைய நிலைக்கு பிக்பாஸ் வீடு திரும்பியுள்ளது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ’நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த போட்டியை விளையாட மொத்தம் 19 பொம்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொம்மையிலும் ஒவ்வொரு போட்டியாளர்களின் பெயர் […]
’என்ன மாதிரி அப்பாவியும் கிடையாது’..!! ’என்ன மாதிரி கெட்டவளும் யாரும் இருக்க முடியாது’..!! ஜனனியின் டெரர் முகம்..!!

You May Like