கொரோனாவால் உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர்.. சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்.. ஐபிஎல்….முதல் போட்டியில் தோல்வியுற்ற மும்பை வெற்றிபெறுமா? கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் இலக்கு! தீபிகா படுகோனுக்கு போதைப்பொருள் தடுப்பு அமைப்பு சம்மன்…காரணம் இதுதான்! 5வது லீக் போட்டி…வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்துமா மும்பை அணி! ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவை நீங்களே ஆன்லைனில் புதுப்பிக்கலாம்..! எப்படி தெரியுமா? மனிதனை விழுங்கும் ராட்சத எலி?…சாக்கடையில் இருந்து வெளியேறியதால் ஓட்டம் பிடித்த மக்கள்! சொந்த வீடு வாங்கணுமா..? உங்க அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் ரூ. 1500 இருந்தால் போதும்.. புதிய வீட்டுக் கடன் திட்டம்.. அமெரிக்க அதிபர் தேர்தல்… வெற்றி யாருக்கு…நீயா, நானா என மாறி மாறி உண்மையை போட்டு உடைக்கும் வேட்பாளர்கள்! எனக்கே அது நடந்திருக்கு..! நடிகை கஸ்தூரி ஓபன் டாக்..! ரசிகர்கள் ஷாக்..! பள்ளிக் கல்வித்துறையின் திடீர் உத்தரவு.. அனைத்து பள்ளிகளும் இந்த விவரங்களை அனுப்ப வேண்டும்.. CM பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கம்? உண்மைக்கு புறம்பான தகவல்! இந்த மாதிரி ஒரு உருளைக்கிழங்க யாரும் பார்த்துருக்க மாட்டீங்க..! அறுவடை செய்த விவசாயி மகிழ்ச்சி..! சானிட்டைசர் கொண்டு டிவியை சுத்தம் செய்த சிறுவன்..! டிவியில் விரிசல் விட்டதால் பெற்றோருக்கு பயந்து தற்கொலை..! 50 பெண்களை கதறவிட்ட டிக்கிலோனா டிக்கிமணி..! கள்ளக் காதலன்களை விரட்டிவிட்டு காதலிகளுடன் உல்லாசம்..! இவ்வளவு பெருசா…இளம்பெண்ணின் கருப்பையில் என்ன இருந்தது தெரியுமா!

‘ஒருநாள் முழு ஊரடங்கு..’ தமிழகத்தில் கொரோனா பாதிப்பை குறைக்க அரசுக்கு கை கொடுக்குமா..?

இன்று முழு ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

முழு ஊரடங்கு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுவரை ஓரளவு கட்டுக்குள் இருந்த நோய்த்தொற்று, அன்லாக் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு தளர்வுகள் காரணமாக வேகமாக அதிகரித்தது. எனினும் தற்போது தளர்வுகளுடன் கூடிய 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகத்தில் ஜூலை மாதத்தில், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தளர்வுகளின்றி, முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு ஏற்கனவே அறிவித்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் பால், மருந்தகங்கள் தவிர மளிகை, இறைச்சிக்கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேவையின்றி வேளியே சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையின் முக்கிய சாலைகள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

202006221247157777 Tamil News TN Govt Consult with More 4 district Full Lockdown SECVPF

இதேபோல் சேலம், கோவை, காஞ்சிபுரம், நெல்லை நாமக்கல், தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி என தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். எனினும் ஒரு சில பகுதிகளில் வெளியே வரும் மக்களுக்கு, ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், நாளை முதல் வழக்கம்போல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வரும். எனில் தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்க இந்த ஒருநாள் முழு ஊரடங்கு அரசுக்கு கை கொடுக்குமா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

1newsnationuser1

Next Post

காஷ்மீர்: சுட்டுக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்கு கொரோனா

Sun Jul 5 , 2020
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. காஷ்மீரின் குல்காம் நகரில் ஆரே என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் ரைபிள் படை பிரிவினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் காஷ்மீர் போலீசார் ஆகியோர் நேற்று கூட்டாக இணைந்து அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். […]
9 தீவிரவாதிகள்

You May Like